இரவோடு இரவாக உக்ரைன் நடத்திய தாக்குதல்: குறிவைக்கப்பட்ட ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள்
ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை குறிவைத்து உக்ரைனிய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளது.
ரஷ்ய எண்ணெய் கிடங்கு மீது தாக்குதல்
இரவு நேரத்தில் ரஷ்யாவின் இராணுவ மற்றும் பொருளாதார இலக்குகளை குறிவைத்து உக்ரைனிய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை உக்ரைனிய இராணுவ படையின் பொதுப் பணியாளர் தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் அறிக்கையில், தாக்குதலின் பிரதான இலக்காக ரஷ்யாவின் சரடோவ்(saratov) பகுதியில் அமைந்துள்ள சரடோவ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் இராணுவ மற்றும் பொருளாதார சக்திகளை குறைக்கும் விதமாக இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக உக்ரைன் அரசு தரப்பு டெலிகிராமில் குறிப்பிட்டுள்ளது.
முக்கிய இராணுவ தளங்கள் குறிவைப்பு
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுடன், அதே இரவில் உக்ரைனின் இராணுவ நிலைகள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது.
கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில், சாகி விமானப்படை தளம் உக்ரைனின் ஆளில்லா விமான தாக்குதலில் சேதமடைந்துள்ளது.
கூடுதல் இராணுவ சேதங்கள் குறித்த விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |