ஒத்திவைக்கப்பட்ட ஸ்மிருதி திருமணம்: தோழிக்காக WBBL இருந்து விலகிய ஜெமிமா
ஸ்மிருதி மந்தனா திருமணம் நின்றதையடுத்து பிக் பாஷ் லீக் தொடரில் இருந்து இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் விலகியுள்ளார்.
இந்தியாவுக்கு திரும்பிய ஜெமிமா ரோட்ரிக்ஸ்
மகளிர் பிக் பாஷ் லீக் தொடரில்(Women’s Big Bash Leaque) பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக இந்திய மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் விளையாடி வருகிறார்.

இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை மற்றும் சக தோழியான ஸ்மிருதி மந்தனாவின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஹொபார்ட் ஹரிகேன் அணிக்கு எதிரான பிரிஸ்பேன் ஹீட் அணியின் போட்டிக்கு பிறகு ஜெமிமா ரோட்ரிக்ஸ் இந்தியாவுக்கு திரும்பினார்.
ஸ்மிருதி மந்தனாவின் திருமண நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்று வந்த நிலையில், ஸ்மிருதி மந்தனாவின் தந்தை உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து ஸ்மிருதி மந்தனாவின் திருமணமும் ஒத்திவைக்கப்பட்டது.
தொடரில் இருந்து விலகிய ஜெமிமா ரோட்ரிக்ஸ்
திருமணம் ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து, ஸ்மிருதி மந்தனாவின் நெருங்கிய தோழியான ஜெமிமா ரோட்ரிக்ஸ், அவருக்கு ஆதரவாக இந்தியாவிலேயே இருக்க முடிவு செய்துள்ளார்.

ஜெமிமா ரோட்ரிக்ஸின் இந்த முடிவை பிரிஸ்பேன் ஹீட் ஏற்றுக் கொண்டுள்ளது.
ஜெமிமா ரோட்ரிக்ஸ் பிரிஸ்பேன் ஹீட் அணியில் இருந்து விலகியது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்து உள்ளது, இருப்பினும் ஜெமிமா ரோட்ரிக்ஸின் நலனே பிரிஸ்பேன் ஹீட் அணியின் முன்னுரிமை என்று தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |