கூலி தொழிலாளி இருந்து IAS அதிகாரி! இலவச Wifi-ல் படித்து சாதனை படைத்த ஶ்ரீநாத்
கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் கூலி வேலையில் இருந்து IAS அதிகாரியாக உயர்ந்து இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கூலி தொழிலிருந்து IAS அதிகாரி!
கேரளாவை சேர்ந்த ஶ்ரீநாத் கே என்ற இளைஞர் கூலி தொழில் செய்தவாரே IAS தேர்வில் தேர்ச்சி பெற்று இருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இவர் தினமும் ரூ.400 முதல் ரூ.500 வருமானத்திற்காக ரயில்வே நிலையத்தில் சாமான்களை துக்கிச் செல்லும் கூலியாக வேலை செய்து வந்துள்ளார்.
இந்த கூலி வேலைக்கு இடையே கிடைக்கும் சிறிய இடைவெளியில் ரயில்வே நிலையத்தில் இருக்கும் இலவச Wifi வசதியை பயன்படுத்தி அயராது படித்துள்ளார்.
நிதி நிலைமைகளால் பாதிக்கப்பட்டிருந்த ஶ்ரீநாத் கே, உயர்நிலைப் பள்ளி மட்டுமே வழக்கமான முறையில் முடித்து இருந்தாலும் தனது விடாமுயற்சியுடன் தனது IAS கனவை துரத்தியுள்ளார்.

இறுதியில் UPSC தேர்வில் வெற்றி பெற்றதுடன், IAS அதிகாரியாகவும் உயர்ந்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |