இலங்கை சிறைச்சாலை மோதலில் 25 பேர் உயிரிழப்பு
இலங்கை நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்
இலங்கையின் நீர்கொழும்பு சிறைச்சாலை நேற்று இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில், 2 பேர் உயிரிழந்தனர்.
மேலும், 34 கைதிகள் காயமடைந்த நிலையில், நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனையடுத்து, சிறைச்சாலைக்கு ஏராளமான சிறப்பு விசேட அதிரடிப்படை அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை மீண்டும் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், 100க்கும் அதிகமானோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில், உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்கள் உடலில் துப்பாக்கி சூடு காயங்கள் இருந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |