மனைவியில் உயிரற்ற உடலுக்கு அருகில் பல வாரங்கள் படுத்து உறங்கிய நபர்: பின்னணி
பெரு நாட்டவர் ஒருவர், தன் மனைவியின் உயிரற்ற உடலுடன் பல வாரங்கள் வாழ்ந்துவந்தது தெரியவந்த நிலையில், அவர் தன் மனைவியைக் கொலை செய்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கிறார்கள்.
மாயமான பெண்
பெரு நாட்டிலுள்ள Lima என்னுமிடத்தில் தன் கணவரான சலாஸார் (Douglas Salazar Castillo, 57) என்னும் நபருடன் வாழ்ந்துவந்த ரீட்டா (Rita Paredes Rioja) என்னும் பெண் நீண்ட நாட்களாக வீட்டை விட்டு வெளியில் வராமலே இருந்துள்ளார்.
அதனால், அக்கம்பக்கத்தில் வாழும் மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆனால், சலாஸார் வீட்டுக்கு வரும்போதெல்லாம், தன் மனைவியை சத்தமாக பெயர் சொல்லி அழைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார்.
மனைவியில் உயிரற்ற உடலுக்கு அருகில்...
ஒருநாள், தான் வாழும் அடுக்கும் மாடிக் குடியிருப்பின் செக்யூரிட்டியிடம், தான் தன் மனைவியைக் கொன்றுவிட்டதாகக் கூறிய சலாஸார், தன் மனைவி இறந்துகிடக்கும் புகைப்படத்தையும் அவருக்கு அனுப்பியுள்ளார்.
அதிர்ந்துபோன அந்த நபர், உடனடியாக பொலிசாரை அழைத்துள்ளார்.
பொலிசார் சலாஸாரின் வீட்டை சோதனையிட்டபோது, வீட்டுக்குள், படுக்கையில் ரீட்டாவின் உடல் ஒரு போர்வையில் சுருட்டிவைக்கப்பட்டிருப்பதைக் கண்டுள்ளார்கள்.
சலாஸார் பல வாரங்களாக தனது மனைவியின் உயிரற்ற உடலுக்கு அருகிலேயே உறங்கிவந்தது தெரியவந்துள்ளது.
அடிக்கடி தம்பதியருக்குள் சண்டை நடக்கும் என அக்கம்பக்கத்தவர்கள் தெரிவித்துள்ள நிலையில், சலாஸார் மனைவியைக் கொலை செய்திருக்கலாம் என பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அதை உறுதி செய்வதற்காக ரீட்டாவின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில், சலாஸாரை பொலிசார் தொடர்ந்து விசாரணைக்குட்படுத்தி வருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |