கோலி சதமடித்தால் பயனர்களுக்கு ரூ.10 கோடிக்கு தங்கம் - தொழிலதிபர் அறிவிப்பு
கோலி ஒரு சதமடித்தாலும் பயனர்களுக்கு ரூ.10 கோடிக்கு தங்கம் வழங்க உள்ளதாக தொழிலதிபர் அறிவித்துள்ளார்.
விராட் கோலி சதம்
இந்தியாவிற்கு வருகை தந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, 3 ODI மற்றும் 5 T20 போட்டிகளில் விளையாட உள்ளது.

Credit; X.com/BCCI
முதலாவது ODI போட்டிஇன்று பரோடாவில் நடைபெற்று வருகிறது. முதலில் துடுப்பாட்டம் ஆடிய நியூசிலாந்து அணி, 50 ஓவர்கள் முடிவில் 300 ஓட்டங்கள் குவித்துள்ளது.
301 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்திய அணி விளையாடி வரும் நிலையில், விராட் கோலி தற்போது 85 பந்துகளில், 8 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸருடன் 90 ஓட்டங்கள் குவித்து ஆதிரடியாக விளையாடி வருகிறார்.

Credit: Alex Davidson—ICC/Getty Images
வீரர் விராட் கோலி இதுவரை 84 சர்வதேச சதங்களை அடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 100 சர்வதேச சதம் அடித்து இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
சச்சினின் இந்த சாதனையை முறியடித்து, அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை பெற விராட் கோலிக்கு இன்னும் 16 சதங்கள் தேவை.
ரூ.10 கோடி மதிப்பிலான தங்கம்
கோலி இன்னும் சில தொடர்களில் மட்டுமே விளையாட உள்ள நிலையில், இந்த நியூசிலாந்து தொடரில் கோலி ஒரு சதமடித்தாலும் ரூ.10 கோடி மதிப்பிலான தங்கத்தை NeoZAP செயலி பயனர்களுக்கு வழங்க உள்ளதாக அதன் நிறுவனர் ராயன் மல்கோத்ரா (Rayan Malhotra) அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
NeoZAP செயலி என்பது டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்ய வாய்ப்பளிக்கும் ஒரு செயலி ஆகும்.
இதில் ரூ.50 முதல் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்யலாம். பயனர்கள் விரும்பும் நேரத்தில் டிஜிட்டல் தங்கத்தை, பணமாகவோ, நகையாகவோ பெற்றுக்கொள்ள அனுமதிக்கிறது.
மேலும், BlueStone போன்ற பிரபலமான நகை பிராண்டுகளுக்கு குத்தகைக்கு விடுவதன் மூலம் தங்கத்தின் வருடாந்திர சந்தை மதிப்பில் கூடுதலாக 5% வருமானத்தைப் பெறவும் உதவுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |