பாகிஸ்தானின் எல்லைக்குள் ஜம்மு காஷ்மீர்: நேபாள ஏர்லைன்ஸ் நிறுவனத்தால் வெடித்த சர்ச்சை
ஜம்மு காஷ்மீரை பாகிஸ்தானின் ஒரு பகுதியாக நேபாள ஏர்லைன்ஸ் நிறுவனம் தங்கள் வரைபடத்தில் காட்டி இருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
சர்ச்சையை கிளப்பிய நேபாள ஏர்லைன்ஸ்
நேற்று நேபாள ஏர்லைன்ஸ் நிறுவனம் ஒன்று தனது சேவை தொடர்பான நெட்வொர்க் வரைபடம் ஒன்றை தங்களது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தது.
இந்த சேவை வரைபடத்தில் இந்தியாவின் டெல்லி, மும்பை, பெங்களூரு நகரங்களும், துபாய், தோஹா போன்ற வெளிநாட்டு நகரங்களும் இடம் பெற்று இருந்தது.
இந்நிலையில், இந்த சேவை வரைபடத்தில் இந்தியாவின் யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் போன்ற பகுதிகள் பாகிஸ்தானின் எல்லைக்கு உட்பட்டு காட்டப்பட்டு இருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்தியா கண்டனம்
இதனை தொடர்ந்து நேபாள ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மீது இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் இந்திய விமான போக்குவரத்து அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் சம்பந்தப்பட்ட நேபாள ஏர்லைன்ஸ் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளது.
இதையடுத்து, அந்த நேபாள ஏர்லைன்ஸ் நிறுவனம் அந்த சமூக வலைதள பதிவை நீக்கியுள்ளதோடு, அந்த வரைபடத்திற்கான மன்னிப்பையும் கோருவதாக தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |