55 பேருடன் சென்ற விமானம் தரையிறங்கும் போது விபத்து - பயணிகளின் நிலை என்ன?
55 பேருடன் சென்ற நேபாள விமானம் தரையிறங்கும் போது விபத்தை சந்தித்துள்ளது.
நேபாள விமான விபத்து
நேபாளத்தின் காத்மண்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு 8;23 மணியளவில், புத்தா ஏர் விமானம் ஒன்று 51 பயணிகள் மற்றும் 4 விமான பணியாளர்கள் உட்பட 55 பேருடன் பத்ராபூர் விமான நிலையம் நோக்கி புறப்பட்டது.

விமானம் 9;08 மணியளவில் பத்ராபூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, ஓடுபாதையில் 200 மீட்டர் விலகி, புல்வெளிக்கு சென்றது.

இதில் விமானம் பெரும் சேதத்தை சந்தித்தது. நல்வாய்ப்பாக விமானத்தில் இருந்த 51 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள புத்தா ஏர் விமான அதிகாரி, "விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதையை விட்டு விலகி சென்ற சம்பவம் குறித்து நாங்கள் மிகவும் கவலை கொண்டுள்ளோம்.
अपडेट: उडान संख्या 901 सम्बन्धमा
— Buddha Air (@AirBuddha) January 3, 2026
हिजो काठमाडौंबाट भद्रपुरका लागि उडेको जहाज रनवे बाहिर गएको घटनाप्रति हामी निकै गम्भीर छौँ। उक्त समयमा उद्धार कार्यमा तदारुकताका साथ खटिनुहुने नेपाल प्रहरी, नेपाली सेना, नागरिक उड्डयन प्राधिकरण तथा बुध्द एयरका कर्मचारीहरूमा हामी आभार व्यक्त…
மீட்பு நடவடிக்கைகளில் பணியாற்றிய நேபாள காவல்துறை, நேபாள ராணுவம், சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் மற்றும் புத்தா விமான ஊழியர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
விமானத்தில் இருந்த 51 பயணிகளில், சிறிய காயங்களுக்கு ஆளானவர்கள் முதன்மை சிகிச்சை பெற்று பாதுகாப்பாக வீடு திரும்பியுள்ளனர். இந்த சம்பவம் குறித்த விரிவான விசாரணையில் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்துடன் முழுமையாக ஒத்துழைக்க எங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறோம்" என தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில் இது போல் விமான விபத்து அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.
கடந்த ஜூலை 2024 இல், சௌர்யா ஏர்லைன்ஸின் விமானம் காத்மாண்டுவில் இருந்து புறப்பட்ட பிறகு விபத்துக்குள்ளானதில் பயணித்த 19 பேரில் 18 பேர் உயிரிழந்தனர்.

கடந்த ஜனவரி 2023 இல், யெட்டி ஏர்லைன்ஸின் விமானம் போகாராவில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில், அதில் இருந்த 68 பயணிகள் மற்றும் 4 பணியாளர்கள் உட்பட அனைவரும் உயிரிழந்தனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |