அமீரக அணிக்கு எதிராக சதமடித்த நேபாள கேப்டன் ரோஹித்
ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நேபாளம் 233 ஓட்டங்கள் எடுத்தது.
தொடக்கம் சொதப்பல்
நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் துபாய் ஐசிசி அகாடமி மைதானத்தில் நடந்து வருகிறது. 
முதலில் துடுப்பாடிய நேபாள அணியில் குஷால் 7 ஓட்டங்களிலும், பீம் 3 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து ஆசிப் ஷெய்க் 48 பந்துகளில் 35 ஓட்டங்களில் அவுட் ஆனார்.
எனினும், அணித்தலைவர் ரோஹித் பாடேல் (Rohit Paudel) நங்கூரமாக நின்று ஆட, ஆரிஃப் 27 ஓட்டங்களும், திபேந்திர சிங் 23 ஓட்டங்களும் எடுத்தனர்.
ரோஹித் பாடேல் 109 ஓட்டங்கள்
சதம் விளாசிய ரோஹித் பாடேல் 130 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 109 ஓட்டங்கள் எடுத்து 8வது விக்கெட்டாக வெளியேறினார்.
அதன் பின்னர் கரண் கேசி (13), ராஜ்பன்ஷி (0) ஆட்டமிழக்க, நேபாள அணி 233 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
ஸாஹித் அலி (Zahid Ali) 4 விக்கெட்டுகளும், ஜுனைத் சித்திக் (Junaid Siddique) 3 விக்கெட்டுகளும், முகமது ரோஹித் கான் மற்றும் ஹைதர் அலி தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |