இரண்டாவது வெள்ள அபாயம் - நேபாளத்தில் மீண்டும் எச்சரிக்கை

Nepal Flood
By Ragavan Aug 27, 2026 12:33 AM GMT
Report

Nepal faces second flood warning: நேபாளத்தில் மீண்டும் வெள்ள அபாயம் இருப்பதாக எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

இரண்டாவது வெள்ள அபாயம்

நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட திடீர் வெள்ளம் இன்னும் முழுமையாக அடங்கவில்லை.

இப்போது, காத்துமாண்டுவை தலைமையிடமாகக் கொண்ட International Centre for Integrated Mountain Development (ICIMOD) நிறுவனம், “இரண்டாவது வெள்ளம் ஏற்படும் அபாயம் மிகுந்துள்ளது” என எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆகஸ்ட் 26 அன்று, பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளம், Bhote Koshi மற்றும் Trishuli ஆற்றுப் பகுதிகளை கடுமையாக பாதித்தது. சில நிமிடங்களில் நீர்மட்டம் 9 மீட்டர் வரை உயர்ந்ததால், கிராமங்கள், சாலைகள், பாலங்கள், கண்காணிப்பு நிலையங்கள் அனைத்தும் சேதமடைந்தன.

ICIMOD விஞ்ஞானிகள், “Lhende Khola பகுதியில் பனிச்சரிவு காரணமாக ஆற்றில் பெரிய அளவில் பனி மற்றும் கற்கள் விழுந்திருக்கலாம். இதனால் ஆற்றின் ஓட்டம் தடைபட்டு, தற்காலிக அணை உருவாகியிருக்கலாம். அது உடைந்தால், இரண்டாவது வெள்ளம் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும்” எனக் கூறியுள்ளனர்.

மோசமான நாடு - கனடாவை கடுமையாக தாக்கிய டிரம்ப்

மோசமான நாடு - கனடாவை கடுமையாக தாக்கிய டிரம்ப்

நேபாள-சீனா எல்லைப் பகுதியில் இன்னும் தடுப்பு அணை இருப்பதாகவும், அது உடைந்தால் Jilong port மற்றும் கீழ்நிலப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 14 மாதங்களில் இதே பகுதியில் இரண்டாவது முறையாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. நுவாகோட், தாடிங் மாவட்டங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ICIMOD இயக்குநர் பெமா க்யாம்சோ, “நேபாள மக்களுடன் நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். இந்த திடீர் பேரழிவு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ எங்கள் பங்கு தொடரும்” என தெரிவித்துள்ளார்.

2,000 அடி அகலமுள்ள பனிப்பாறை உடைந்ததால் ஏற்பட்ட பேரழிவு - நேபாளம் வெள்ளம்

2,000 அடி அகலமுள்ள பனிப்பாறை உடைந்ததால் ஏற்பட்ட பேரழிவு - நேபாளம் வெள்ளம்

விஞ்ஞானிகள், “குளிர்பரப்பில் (Cryosphere) ஏற்படும் மாற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பனிச்சரிவு, பனிச்சரிவு அணைகள், நிலச்சரிவு போன்றவை மிக வேகமாக நடக்கின்றன. இதற்கு எல்லைத் தாண்டிய ஒத்துழைப்பு தேவை” என வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், நேபாள அரசு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் வெளியேற்றம் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US