நேபாளப் பெருவெள்ளம்... பிரித்தானியா, அமெரிக்கா உட்பட 35 நாடுகளின் பயணிகள் மாயம்
35 Countries Citizens Are Missing After Nepal Floods: நேபாள வெள்ளப்பெருக்கிற்குப் பிறகு காணாமல் போன 35 நாடுகளின் பயணிகள்.
நேபாளம்-திபெத் எல்லைப் பகுதியில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, 1,400-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதுடன், 469 பேர்கள் மரணமடைந்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டது.
பேரிடர் மேலாண்மை
இந்த எண்ணிக்கைகள் அடுத்த சில மணி நேரங்களில் மாறுபடக்கூடும்; ஒரு பெரும் பேரிடருக்குப் பிறகு இது இயல்பான ஒன்று என்றே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
இரட்டை குடியுரிமை கொண்டவர்களை இருமுறை கணக்கில் சேர்ப்பது, கண்டெடுக்கப்பட்ட உடல்களைக் காணாமல் போனவர்களின் பட்டியலுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது மற்றும் பேரிடர் காலச் சூழலில் நிலவும் குழப்பம் ஆகியவை புள்ளிவிவரங்களில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.

இந்த நிலையில், குறைந்தது 517 வெளிநாட்டினர் உட்பட 910 பேர் காணாமல் போயுள்ளதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை அமைப்பு வியாழக்கிழமை தெரிவித்தது.
திபெத்துடனான எல்லைப் பகுதியில், 260 வெளிநாட்டினர் உட்பட 558 பேர் காணாமல் போயுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. இவ்விரு எல்லைப் பகுதிகளிலும் காணாமல் போனவர்களின் மொத்த எண்ணிக்கை 1,468 எனக் கூறப்படுகிறது.
நேபாள சுற்றுலா வாரியம் வியாழக்கிழமையன்று, காணாமல் போன நேபாள மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பயணிகளின் மொத்த எண்ணிக்கையை 667 என்று தெரிவித்தது.
நேபாளத்தில் காணாமல் போனவர்களில் சுமார் 100 சீனர்களும் அடங்குவர் என்று சீனாவின் வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 24 சீனர்கள் குறித்த தகவல் ஏதும் இல்லை என்று நேபாள சுற்றுலா வாரியம் கூறியுள்ளது.
நேபாளத்தின் சுற்றுலா வாரியத்தின் புதிய புள்ளிவிவரங்களில், இந்தியாவில் இருந்து வந்தவர்களில் 290 பேர் காணாமல் போனதைக் காட்டின; மேலும் 84 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்கக் குடிமக்கள் 90 பேர்கள் காணாமல் போயுள்ளதாக அமெரிக்க வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது; அவர்களில் மூவர் மீட்கப்பட்டுள்ளதாகவும், அமெரிக்கர்கள் யாரும் உயிரிழந்ததாகத் தகவல் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாள சுற்றுலா வாரியம்
முன்னதாக வியாழக்கிழமையன்று, காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 65 என்று நேபாள சுற்றுலா வாரியம் தெரிவித்திருந்தது. உக்ரைன் தரப்பில் 56 பயணிகளை இதுவரை தொடர்பு கொள்ள முடியாமல் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே, நேபாளத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலேசியர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் வியாழக்கிழமை தெரிவித்தார். வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து காணாமல் போன அவுஸ்திரேலியக் குடிமக்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளதாக அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
பிரித்தானியாவைச் சேர்ந்த 33 பேர் காணாமல் போயுள்ளதாக நேபாள சுற்றுலா வாரியத்தின் புள்ளிவிவரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன. கனேடியர்கள் 25 பேர் மாயமாகியுள்ளதாக நேபாளம் தரப்பில் தெரிவித்துள்ள நிலையில்,
நேபாளம் மற்றும் திபெத்தில் உள்ள 30 கனேடியர்கள் மற்றும் நிரந்தர வசிப்பாளர்கள் தொடர்பில் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதை அரசாங்கம் அறிந்திருக்கிறது என்று கனடாவின் வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் கூறியுள்ளார்.
இதனிடையே, தென் கொரியா, சிங்கப்பூர், ஜேர்மனி, ரஷ்யா உட்பட 35 நாடுகளின் பயணிகள் இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கியுள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |