மயமாகி மறைந்தே போன 5,285 பேர் - முடிவுக்கு வந்த நேபாள பெருவெள்ள மீட்பு நடவடிக்கை
Nepal stopped rescue operation,focus on rehabilitation: 5,285 பேர் இன்னும் கிடைக்காத நிலையில், நேபாள பெருவெள்ள மீட்பு நடவடிக்கை முடிவுக்கு வந்தது.
புனரமைப்பு பணிகளில் கவனம்
நேபாளத்தில் ஆகஸ்ட் 26-ஆம் திகதி ஏற்பட்ட போதேகோஷி-திரிசூலி வெள்ளப்பெருக்கு 1,455 உயிர்களை பறித்தது. 40 நாட்கள் நீடித்த தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் நிறைவடைந்த நிலையில், அரசு தற்போது மறுவாழ்வு மற்றும் புனரமைப்பு பணிகளில் கவனம் செலுத்துகிறது.

பிரதமர் பலேந்திர ஷா தலைமையில் நடைபெற்ற தேசிய பேரிடர் ஆபத்து குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையத்தின் (NDRRMA) 21-வது கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அதிகாரிகள், மாவட்ட பாதுகாப்புக் குழு மற்றும் பேரிடர் மேலாண்மை குழுக்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் தேடுதல் நடவடிக்கைகளை நிறுத்தி, மறுசீரமைப்பை விரைவுபடுத்த உத்தரவிட்டுள்ளனர்.
விமானம் தரையிறங்கும் துல்லியத்தை 4 மடங்கு உயர்த்திய ரஷ்ய விஞ்ஞானிகள் - புதிய மென்பொருள் கண்டுபிடிப்பு
காணாமலே போன 5,285 பேர்
அதிகாரப்பூர்வ தகவலின்படி, இந்த பேரிடரில் 13,795 பேர் மீட்கப்பட்டு, 5,285 பேர் இன்னும் காணாமல் உள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுசீரமைப்பு மற்றும் குடியிருப்பு திட்டங்களுக்கு NPR 559.17 பில்லியன் மதிப்பிலான நிதி ஒதுக்கீடு செய்ய நிதியமைச்சரிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் ஷா, “மத்திய, மாகாண, உள்ளாட்சி அரசுகள் இணைந்து செயல்பட்டதால் மீட்பு நடவடிக்கைகள் சீராக நடந்தன. அதேபோல் மறுசீரமைப்பும் ஒருங்கிணைந்த முறையில் நடைபெறும்” எனக் கூறினார்.
நேபாள காங்கிரஸ் மற்றும் பல மாகாண முதல்வர்கள், மறுசீரமைப்பு முயற்சிகளை ஆதரிப்பதாக தெரிவித்தனர். அரசு, பாதிக்கப்பட்ட 1,226 பேருக்கு தற்காலிக தங்குமிடங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வெள்ளம், நேபாள-திபெத் எல்லை அருகே ஏற்பட்டது. போதேகோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம், வீடுகள், வாகனங்கள், சாலைகள், பாலங்கள், நீர்மின் திட்டங்களை அழித்தது. திபெத்தில் கூட 43 பேர் உயிரிழந்ததாகவும், 500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |