நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு: நிலநடுக்கம் காரணம் அல்ல., அமெரிக்கா வெளியிட்ட திடுக்கிடும் காரணம்

Nepal Flood Nepal Crisis
By Thiru Aug 27, 2026 06:32 AM GMT
Report

Nepal Floods caused by Glacial Collapse: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கிற்கான காரணத்தை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்(USGS) தெளிவுபடுத்தியுள்ளது.

நேபாள வெள்ளப்பெருக்கு

திபெத் எல்லையில் இருந்து வந்த திடீர் மற்றும் கடுமையான வெள்ளப்பெருக்கு வடக்கு நேபாள பகுதிகளை தீவிரமாக உலுக்கியுள்ளது.

போட்டே கோஷி(Bhote Koshi) நதியில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளத்தில் நுவாகோட் மற்றும் தாதிங் மாவட்டங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.

நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு: நிலநடுக்கம் காரணம் அல்ல., அமெரிக்கா வெளியிட்ட திடுக்கிடும் காரணம் | Nepal Floods Caused By Glacial Collapse

இந்த வெள்ளப்பெருக்கு சம்பவத்தில் இதுவரை குறைந்தது 157 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் 142 இந்தியர்கள் உட்பட 341 வெளிநாட்டினரை சேர்த்து மொத்தம் 400க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருப்பதாக சுற்றுலாத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

நேபாளத்தில் ஏற்பட்ட இந்த மிகப்பெரிய வெள்ளப்பெருக்கிற்கு ஆரம்பத்தில் நிலநடுக்கமே காரணமாக இருக்கலாம் என்று கருதப்பட்டது.

ஆனால் இந்த வெள்ளப்பெருக்கு நேபாள-சீன எல்லையில் பூமிக்கடியில் பதிவான நிலநடுக்கத்தால் அல்ல. மாறாக பனிப்பாறை சரிவு(glacial collapse) மற்றும் குப்பைகள் பெருக்கெடுத்ததால்(debris flow) ஏற்பட்ட சம்பவம் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்(USGS) தெளிவுபடுத்தியுள்ளது.

ஆரம்ப கட்டத்தில், காலை 8.37 மணியளவில் காத்மாண்டுவிற்கு வடக்கே 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது போன்ற முடிவுகளை தானியங்கி அமைப்புகள் பதிவு செய்தன.

நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு: நிலநடுக்கம் காரணம் அல்ல., அமெரிக்கா வெளியிட்ட திடுக்கிடும் காரணம் | Nepal Floods Caused By Glacial Collapse

ஆனால் பின்னர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பிளாண்ட் லேப்ஸ் செயற்கைக்கோள் படங்கள் மற்றும் நடத்தப்பட்ட கூடுதல் ஆய்வுகளில், பனி மற்றும் பாறைகளில் ஏற்பட்ட சரிவே லெண்டே நதியில் பெரும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது.

இந்த வெள்ளப்பெருக்கே போட்டே கோஷி நதியில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி ரசுவே, நுவாகோட் மற்றும் தாதிங் ஆகிய மாவட்டங்களை உலுக்கியுள்ளது.

இந்த பனிச்சரிவு நிலநடுக்கத்திற்கு நிகரான 5.2 ரிக்டர் அளவிலான நில அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளனர்.

மேலும் இது டெக்டோனிக் தகடுகளின் நகர்வு அல்ல என்றும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US