Nepal Floods: சுயநலமாக தப்பிய சீன மேற்பார்வையாளர் உயிர் பிழைத்த தொழிலாளி குற்றச்சாட்டு
Nepal flood survivor claims Chinese supervisor fled: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பேரழிவில் உயிர் பிழைத்த ஒரு தொழிலாளி, சீன மேற்பார்வையாளர் மீதான அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார்.
தப்பிச் சென்ற சீன மேற்பார்வையாளர்
Trishuli-3A நீர்மின் திட்டத்தின் சுரங்கத்தில் பணியாற்றிய தொழிலாளி ராஜ் சேத்ரி (Raj Chhetri), வெள்ளம் ஏற்பட்டபோது தன்னையும் பலரையும் சுரங்கத்திலிருந்து வெளியேற்ற உதவி கேட்டு சீன மேற்பார்வையாளரிடம் சென்றதாக கூறினார்.

ஆனால் அவர் “நான் சென்று பார்த்துவிட்டு வருகிறேன்” என்று சொல்லி சுரங்கத்திலிருந்து தப்பிச் சென்றதாக குற்றம்சாட்டினார்.
இந்த திட்டம் சீனாவின் Power China Corporation நிறுவனத்தால் மேற்பார்வை செய்யப்படுகிறது. வெள்ளத்தால் சுரங்கங்கள் சேறும், குப்பையும் நிரம்பி தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். தற்போது குறைந்தது 40 பேர் காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போன 900-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்
மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நீர்மின் திட்டங்களில் 900-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளனர்.
மீட்பு குழுக்கள் சுரங்கங்களில் சிக்கியிருக்கும் தொழிலாளர்களை மீட்க போராடி வருகின்றன. சுரங்கங்கள் சேறும், குப்பையும் அடைத்ததால் மீட்பு பணிகள் கடினமாகியுள்ளது.
இந்த குற்றச்சாட்டு, சீன மேற்பார்வையாளர்களின் பொறுப்பின்மை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
நேபாளத்தில் ஏற்பட்ட இந்த பேரழிவு, அங்குள்ள தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் பொறுப்புகள் குறித்து பெரும் விவாதத்தை தூண்டியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |