நேபாளத்தை புனரமைக்க 5 பில்லியன் டொலர் தேவை - நிதியமைச்சர்
நேபாளத்தை புனரமைக்க 5 பில்லியன் டொலர் தேவை என நிதியமைச்சர் Swarnim Wagle தெரிவித்துள்ளார்.
நேபாள பெருவெள்ளம்
ஆகஸ்ட் 26 ஆம் திகதி சீன மற்றும் நேபாள எல்லையில் பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 600ஐ கடந்துள்ளது.

மேலும், 3000க்கும் அதிகமானோர் மாயமாகியுள்ளதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது. ஏராளமான பாலங்கள், வாகனங்கள், கட்டிடங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளது.
மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், நேற்று திபெத்தில் உள்ள அணை உடைந்தன் காரணமாக மீட்பு பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
5 பில்லியன் டொலர் தேவை
"பாலங்கள் சேதமடைந்த இடங்களில் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு இணைப்புகளைச் சீரமைப்பதற்கும், டிஎன்ஏ பரிசோதனை நடத்துவதற்கும், சடலங்களை நீண்ட காலத்திற்குப் பாதுகாத்து வைப்பதற்கும் சிறப்பு நிபுணர் உதவி தேவை என நேபாள வெளியுறவு அமைச்சர் ஷிசிர் கானல் தெரிவித்தார்.
தற்போது மீண்டும் மீட்பு பணி தொடங்கியுள்ள நிலையில், இந்தியா மற்றும் சீனாவிலிருந்து சுரங்க மீட்பு குழு நேபாளம் விரைந்துள்ளது.

மேலும்,முன் தயாரிக்கப்பட்ட பாலங்கள், போர்வைகள், மருந்துகள் மற்றும் உணவு உள்ளிட்ட 60 டன் நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்லும் 3 விமானங்களை இந்தியா அனுப்பியுள்ளது.

பேரழிவு நிகழ்ந்து 3 நாட்களுக்குப் பிறகு, மீட்கப்பட்ட சில உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்குச் சிதைந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுகாதார அபாயங்கள் மற்றும் நோய் பரவும் அச்சம் காரணமாக, டிஎன்ஏ மாதிரி சேகரிப்பு உள்ளிட்ட சட்டப்பூர்வ நடைமுறைகளுக்கு பிறகு உடல்கள்அடக்கம் செய்யப்பட உள்ளது.

மேலும், புனரமைப்புப் பணிகளுக்கு 5 பில்லியன் டொலர் வரை செலவாகும் என அரசு ஆரம்பகட்ட மதிப்பீடு செய்துள்ளது. இது ஒரு மதிப்பீடு மட்டுமே. இழப்பு மற்றும் சேதம் மதிப்பிடப்பட்டு வருகிறது" என நேபாள நிதியமைச்சர் Swarnim Wagle தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |