நேபாளத்தில் 1643 குழந்தைகளின் உயிரை பேராபத்தில் இருந்து காப்பாற்றிய ஆசிரியர்
Nepal Headmaster saves 1643 children life in flood: நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் 1,600-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரை ஆசிரியர் ஒருவர் காப்பாற்றினார்.
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாடசாலை ஒன்று அடித்துச் செல்லப்பட்ட நிலையில், ஆசிரியர் ஒருவர் 1,600-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றினார்.
பாடசாலையின் முதல்வர்
நேபாளத்தின் வடக்கு-மத்திய பகுதியில் உள்ள திரிசூலி பள்ளத்தாக்கில் அமைந்துள்ள திரிபுவன் திரிசூலி மேல்நிலை பாடசாலையின் முதல்வராக பணியாற்றுபவர் இராஜேந்திர தவாடி.

அப்பகுதியில் ஆற்றின் மேல் பகுதியில் ஐந்து மைல் தொலைவில் உள்ள கிராமம் ஒன்று வெள்ளப்பெருக்கிற்கு இரையானதாக, நண்பர் ஒருவர் மூலம் தவாடிக்கு தகவல் கிடைத்துள்ளது.
அத்துடன் ஆற்றில் இருந்து 200 அடி உயரத்தில் அமைந்திருந்த பாடசாலைக்கு நோக்கி, வெள்ள நீர் வேகமாக உயர்ந்து வருவதாக பெற்றோரும் அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அச்சமயம் 900 குழந்தைகள் ஏற்கனவே பாடசாலைக்கு வந்திருந்தனர். மேலும், 700 குழந்தைகள் நடந்தும், பேருந்திலும் பாடசாலைக்கு வந்து கொண்டிருந்தனர்.
1,643 குழந்தைகள்
அப்போது தனது பாடசாலை ஆபத்தான நிலையில் இருப்பதை உணர்ந்த முதல்வர் தவாடி, உடனடியாக பாடசாலை பேருந்து சாரதிகளை தொடர்புகொண்டு திரும்பிச் செல்லுமாறு கூறியிருக்கிறார்.
பின்னர் பாடசாலையில் குழந்தைகளை கவனிக்கத் தொடங்கிய அவர், மாணவர்களை நடந்தே குன்றின் மீது செல்லுமாறு அனுப்பியிருக்கிறார்.
அவரும் அவர்களுடன் பின்தொடர்ந்து சென்றுள்ளார். இவ்வாறு 1,643 குழந்தைகள் மற்றும் ஊழியர்கள் சிலரை துரிதமாக செயல்பட்டு அவர் காப்பாற்றியிருக்கிறார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |