நேபாளத்தில் தரையில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்: 4 சீன பயணிகள் மற்றும் விமானி உயிரிழப்பு
நேபாளில் ஹெலிகாப்டர் விபத்தில் விமானி உள்பட நான்கு சீன பயணிகள் உயிரிழந்துள்ளனர்.
ஹெலிகாப்டர் விபத்து
புதன்கிழமை, ஆகஸ்ட் 7 திகதி அன்று நேபாளில் ஏற்பட்ட பயங்கரமான ஹெலிகாப்டர் விபத்தில் நேபாளி விமானி மற்றும் நான்கு சீன பயணிகள் உயிரிழந்துள்ளனர்.
காத்மாண்டுவிலிருந்து புறப்பட்ட ஏர் டயினாஸ்டி ஹெலிகாப்டர் பிரபலமான டிரெக்கிங் தொடக்கப் புள்ளியான சியாபுருபெசி(Syabrubesi) நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
ஹெலிகாப்டர் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே போக்குவரத்து கட்டுப்பாட்டுடன் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், தலைநகருக்கு வடக்கே உள்ள நுவாகோட் மாவட்டத்தின், காட்டுப் பகுதியில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதையடுத்து இராணுவத்தினர் மற்றும் கூடுதல் ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட மீட்புக் குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.
ஆனால் துரதிஷ்டவசமாக ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய ஐவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்திற்கான காரணம்
விபத்திற்கான காரணம் தற்போது விசாரணையில் உள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு, காத்மாண்டுவிலிருந்து புறப்பட்ட ஒரு பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேபாளில் உள்ள சீன தூதரகம் நான்கு சீன குடிமக்களின் மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளது மற்றும் துயரில் இருக்கும் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |