700 மீட்டர் பள்ளத்தில் பாய்ந்த ஜீப்: நேபாளத்தில் 20 பக்தர்கள் உயிரிழப்பு
நேபாளத்தில் மலையிலிருந்து ஜீப் கவிழ்ந்த விபத்தில் 20 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
புத்த பூர்ணிமா கொண்டாட்டம்
நேபாளத்தின் ரோல்பா மாகாணத்தில் உள்ள ஜல்ஜாஜா என்ற மலைப்பகுதி அமைந்துள்ளது.
இந்த மலைப்பகுதி தலைநக காத்மாண்டுவில் இருந்து மேற்கே கிட்டத்தட்ட 500 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
இந்த மலைப்பகுதியில் 3000 அடி உயரத்தில் புத்த மடாலயம் ஒன்று அமைந்துள்ள நிலையில் அங்கு இன்று புத்த பூர்ணிமா கோலகலமாக நடைபெற உள்ளது.

இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு குவிந்து வருகின்றனர்.
கவிழ்ந்த ஜீப்
இந்நிலையில் கோவிலுக்கு செல்வதற்காக நேற்று மாலை பக்தர்கள் சிலர் ஜீப்பில் பயணித்து கொண்டிருந்த போது, ஜீப் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மலையில் இருந்து உருண்டது.
சுமார் 700 மீட்டர் ஆழ பள்ளத்தாக்கில் ஜீப் கவிழ்ந்ததில் அதில் பயணித்த 20 பக்தர்களும் உடல் சிதறி உயிரிழந்தனர்.
மேலும் அப்பகுதியில் தீவிரமான மழை பெய்து வருவதால் மீட்புப் பணியில் தொய்வு இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |