குலுக்கலைப் பார்க்க கூட இல்லை - லொட்டரியில் ரூ.78 கோடி பரிசு வென்ற நபர்
நேபாளத்தை சேர்ந்த நபர் லொட்டரியில் ரூ.78 கோடி பரிசு வென்றுள்ளார்.
லொட்டரியில் ரூ.78 கோடி
ஐக்கிய அரபு அமீரக லொட்டரி குலுக்கல்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெறுகின்றன. 30 மில்லியன் திர்ஹாம் முதல் பரிசுடன், இரண்டாம் பரிசாக 5 மில்லியன் திர்ஹாம் வழங்கப்படுகிறது.

தற்போது, முதல்முறையாக வெற்றி எண்களின் முழுத் தொகுப்புடன் பொருந்தக்கூடிய 7 அதிர்ஷ்ட எண்களையும் தேர்ந்தெடுத்து, 30 மில்லியன் திர்ஹாம் பரிசை ஒருவர் வென்றுள்ளார்.
அபுதாபியில் வசித்து வரும் நேபாள நாட்டை சேர்ந்த தயாப் கான் என்பவர் 30 மில்லியன் திர்ஹாம்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.78 கோடி) லொட்டரி வென்றுள்ளார்.
இது குறித்து பேசிய தயாப் கான், "நான் வானத்தில் இருப்பது போல, மிகவும் அற்புதமாக உணர்கிறேன். நான் எண்களைத் தோராயமாகத் தேர்ந்தெடுத்தேன். குலுக்கலைப் பார்க்கக்கூட இல்லை. பின்னர் எனது மின்னஞ்சல் மூலம் முடிவைத் தெரிந்துகொண்டபோது, அது ஒரு அருமையான உணர்வாக இருந்தது" என்று கூறினார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |