நேபாளத்தில் 64 வயது பெண் உயிருடன் மீட்பு
Nepal mudslide 64-year-old woman rescued: நேபாள பேரழிவிலிருந்து மற்றோரு பெண் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
64 வயது நேபாள பெண் மீட்பு
நேபாளத்தின் Nuwakot மாவட்டத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய மண்சரிவில் சிக்கியிருந்த 64 வயது நேபாள பெண் 10 நாட்கள் கழித்து உயிருடன் மீட்கப்பட்டார்.
மீட்பு குழுவினர், இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த அந்த பெண்ணை சனிக்கிழமை உயிருடன் வெளியே கொண்டு வந்தனர். ஆரம்ப சிகிச்சைக்குப் பிறகு, அவரை காத்மாண்டுவுக்கு மாற்றி மேலதிக சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சனிக்கிழமையன்று, நேபாள சுரங்கத்தில் சிக்கியிருந்த சீன தொழிலாளி ஒருவரும் உயிருடன் மீட்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
நேபாள பொலிஸ் வெளியிட்ட சமீபத்திய தகவலின்படி, இதுவரை 1,344 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 4,898 பேர் தொடர்பில் இல்லை என்றும், 8,631 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
🇳🇵 Nepal | Woman Alive After 11 Days Under the Rubble
— Siraj Noorani (@sirajnoorani) September 5, 2026
In a scene that restored hope, Nepal's Armed Police Force rescued a 68-year-old woman alive from inside a house destroyed by floods in Bhitravati, on the eleventh day of the disaster.
She was found in a state of severe… pic.twitter.com/2sdmSnfxLE
மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நேபாள இராணுவம், ஆயுத பொலிஸ் படை மற்றும் உள்ளூர் தன்னார்வலர்கள் இணைந்து உயிர் பிழைத்தவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |