Nescafe, KitKat தயாரிப்புகள் ஏன் விற்பனையாகவில்லை... உண்மையை ஒப்புக்கொண்ட நிறுவனங்கள்
உலகம் முழுவதும் வாடிக்கையாளர்களைக் கொண்ட Nescafe, KitKat மற்றும் Purina உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளின் விற்பனை சமீபத்தில் சரிவடைந்துள்ளதன் காரணத்தை ஒப்புக்கொண்டுள்ளன.
விற்பனை சதவிகிதம்
உலகின் உணவு மற்றும் பானங்கள் தயாரிக்கும் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான Nestle இந்த ஆண்டில் தங்கள் விற்பனை சதவிகிதம் கடுமையாக சரிவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
Nestle நிறுவனம் மட்டுமின்றி, செல்லப்பிராணிகளுக்கு உணவு உற்பதி நிறுவனங்களான Purina மற்றும் Felix, உடனடி உணவு நிறுவனங்களான Lean Cuisine மற்றும் Stouffers,
குடிநீர் விற்பனை நிறுவனமான San Pellegrino மற்றும் DiGiorno pizza ஆகிய நிறுவனங்கள் செப்டம்பர் வரையிலான 9 மாதங்களில் 2.4 சதவிகிதம் விற்பனை சரிவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த அளவிலான சரிவு என்றால், பல மில்லியன் கணக்கிலான பொருட்கள் கடைகளில் தேங்கும் என்றே குறிப்பிடுகின்றனர். இந்த நிலையில், தொடர்புடைய நிறுவனங்களின் தலைவர்கள் உண்மையை ஒப்புக்கொண்டதுடன், தவறு தங்கள் மீதிருப்பதாகவே தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் விலையை கணிசமாக அதிகரித்ததன் காரணமாக வாடிக்கையாளர்கள் தங்களை கைவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சலுகைகளை வழங்க
பொதுவாக எல்லா நாடுகளிலும் ஆனால் குறிப்பாக அமெரிக்காவில் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகம் என்பது நுகர்வோரின் கருத்தாக உள்ளது என தெரிவித்துள்ளார் Nestlé தலைமை நிர்வாக அதிகாரியான Laurent Freixe.
மேலும், Nestlé நிறுவனம் தற்போது விலைகளை குறைத்து வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் சலுகைகளை வழங்க இருப்பதாகவும் Laurent Freixe தெரிவித்துள்ளார்.
சமீபத்திய மாதங்களில் அமெரிக்காவில் தயாரிக்கப்படும் Nestlé பொருட்களின் விலையில் 1 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுவிஸ் நிறுவனமான Nestlé உலகம் முழுவதும் KitKat என சாக்லேட் பார்களை விற்பனை செய்கிறது. ஆனால் அமெரிக்காவில் மட்டும் KitKat என காலை உணவை விற்பனை செய்கிறது. Hershey நிறுவனம் அமெரிக்காவில் KitKat என சாக்லேட் பார்களை விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |