பிரித்தானியாவில் அதிகரித்து வரும் இடம்பெயர்வோரின் எண்ணிக்கை: வலுக்கும் சட்டங்கள்
பிரித்தானியாவில் கடந்த ஆண்டை விட இடம் பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, ONS செய்த ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது.
அதிகரிக்கும் எண்ணிக்கை
பிரித்தானியாவில் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் முதல், வேறு நாடுகளிலிருந்து இடம் பெயர்ந்தோரின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது.
இந்த கணக்கீட்டின் படி, முந்தைய ஆண்டுகளின் அளவை விட, கடந்த ஆண்டில் இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 606,000 ஆக உயர்ந்திருப்பதாக, தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
@pa
இன்று காலை தேசிய புள்ளியியல் அலுவலகத்தால் (ONS) வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள், கடந்த 2022ல் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை சுமார் 1.2 மில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது, அதே நேரத்தில் குடியேற்றம் 557,000 ஆக இருந்துள்ளது.
கடந்த ஆண்டு பிரித்தானியா வந்தவர்களில், அதிகமாக ஐரோப்பிய நாட்டினர் அல்லாதவர்கள் 9,25,000 பேர் எனவும், ஐரோப்பிய நாட்டை சேர்ந்தவர்கள் 1,51,000 பேர் எனவும், மற்ற பிரித்தானியர்கள் 88,000 பேர் எனவும் புள்ளியியல் அறிக்கையில் தெரிகிறது.
மேலும் கடந்த ஆண்டில் குடியேற்றம் அதிகரித்திருந்தாலும், புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக தேசிய புள்ளியியல் விவரங்கள் தெரிவிக்கிறது.
போரும், பொருளாதார நெருக்கடியும்
இந்த எண்ணிக்கை தற்போது உலகம் முழுவதும் ஏற்பட்டு வரும், பொருளாதார நெருக்கடி மற்றும் போரின் அடிப்படையில் நடைபெறுவதாகவும், ஆனால் படிப்புக்காக வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், அதனை தொடர்ந்து கண்காணித்து வருவோம் என ONS தெரிவித்துள்ளது.
@getty images
கடந்த ஆண்டில் இடம் பெயர்வோரின் எண்ணிக்கைக்கான காரணம், கொரோனா முடிவடைந்ததால் மாணவர்கள் படிப்பிற்கும், சிலர் வேலைக்காகவும் விண்ணப்பம் செய்வதால் கூட இருக்கலாம் என கூறியுள்ளனர்.
@sky
இந்த இடம்பெயர்வோரின் உயர்வால், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் நாட்டின் பணவீக்கம் அதிகரித்திருப்பதால் இதற்கு உடனே தீர்வு காணும் நிலையில் அரசு உள்ளது.
வலுக்கும் கட்டுப்பாடுகள்
வெளிநாட்டிலிருந்து வரும் தொழிலாளர்களை பிரித்தானியா நம்பியிருப்பதால், நாம் அதை பற்றியும் சிந்திக்க வேண்டுமென உள்துறை செயலர் சுயெல்லா பிரேவர்மேன் கூறியுள்ளார்.
@getty images
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக, பிரித்தானியாவிற்கு பட்டப்படிப்புக்கு வரும் மாணவர்கள் தங்களது குடும்பத்தினரை அழைத்து வருவதற்கான தடையை உள்துறை செயலர் அறிவித்திருந்தார்.
பிரித்தானியாவில் ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாடுகளிலிருந்து தொழிலாளர்கள் அதிகம் வருவதால், நாட்டில் பணியாளர்கள் பற்றாக்குறை குறைந்திருப்பதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும் அரசு வரும் நாட்களில் இடம் பெயர்வோருக்கான கட்டுப்பாட்டை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.