புதிய மொசாட் தலைவரை நியமித்த நெதன்யாகு: பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பு
மொசாட்டின் புதிய தலைவராக மேஜர் ஜெனரல் ரோமன் கோஃப்மேனை அந்நாட்டு ஜனாதிபதி நெதன்யாகு நியமித்துள்ளார்.
புதிய மொசாட் தலைவர்
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, மேஜர் ஜெனரல் ரோமன் கோஃப்மேனை(Major General Roman Gofman) நாட்டின் முதன்மை அமைப்பான மொசாட்டின்(Mossad) புதிய தலைவராக நியமித்துள்ளார்.

வியாழக்கிழமை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு புதிய தலைமை மாற்றம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த நியமனமானது, பல்வேறு வேட்பாளர்களிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல் மற்றும் முழுமையான தேர்வு முறைக்கு பிறகே நடைபெற்று இருப்பதாக வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய மொசாட் தலைவர் டேவிட் பார்னியாவிற்கு பதிலாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மேஜர் ஜெனரல் ரோமன் கோஃப்மேன் புதிதாக பொறுப்பேற்கவுள்ளார்.

தற்போதைய மொசாட் தலைவர் டேவிட் பார்னியாவின் 5 ஆண்டு பதவி காலம் ஜூன் 2026 உடன் முடிவடைய உள்ள நிலையில் இந்த அறிவிப்பானது வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |