பிரித்தானிய சட்டத்தரணியால் நெதன்யாகுவுக்கு கைதாணை... இஸ்ரேல் அளித்த நெருக்கடி
பிரித்தானியரான ICC சட்டத்தரணியால் நெதன்யாகுவுக்கு எதிராக கைதாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், அவர் இஸ்ரேல் உளவுத்துறையால் குறிவைக்கப்பட்டுள்ளாரா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
வரலாற்றிலேயே முதல் முறை
பிரித்தானியரான சட்டத்தரணி Karim Khan சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் எடுத்த முடிவு உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. 2024 மே மாதம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக கைதாணைகளை பிறப்பிக்க அவர் நீதிபதிகளை கேட்டுக் கொண்டார்.

நெதன்யாகு மட்டுமின்றி, இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் மூன்று ஹமாஸ் தலைவர்கள் மீதும் கைதாணைக்கு அவர் கோரிக்கை வைத்தார்.
அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளின் ஆதரவு பெற்ற, ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட ஒரு தலைவருக்கு எதிராக ICC-ல் கைதாணை கோரியிருப்பது அதன் வரலாற்றிலேயே இதுவே முதல் முறை.
ஆனால் அந்த விவகாரத்தில் கரீம் கானுக்கு ஏற்பட்ட பின்னடைவு துரிதமானது. அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடுமையாக விமர்சித்தார். இஸ்ரேலும் இந்த விவகாரத்தைக் கடுமையாக எதிர்கொண்டது.
ஆனால் அதன் பின்னர் கரீம் கானின் வாழ்க்கை தலைகீழாக மாறியது. தீவிர அரசியல் நெருக்கடிக்கு உட்பட்டும், காஸாவில் போர் நடந்து கொண்டிருக்கும் நிலையிலும், கரீம் கான் மீது பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.
கரீம் கானுடன் பணியாற்றிய 30 வயது கடந்த பெண் சட்டத்தரணி ஒருவர் நேரிடையாகவே குற்றாட்டை முன்வைத்தார். கரீம் கான் அந்த குற்றச்சாட்டுகளை மொத்தமாக நிராகரித்திருந்த நிலையில், ஓராண்டு காலமாக முன்னெடுக்கப்பட்ட விசாரணையிலும் எந்த முடிவும் எட்டவில்லை.

இந்த நிலையிலேயே, இஸ்ரேல் உளவு அமைப்பான Mossad கரீம் கானுக்கு எதிராக களமிறங்கியிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது. தொடர்புடைய பெண் சட்டத்தரணி இஸ்ரேல் உளவு அமைப்பின் கைப்பாவையாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
திட்டமிட்ட நடவடிக்கை
அதிரடி திருப்பமாக உளவு பார்க்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அந்தப் பெண் குறிவைக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியானது. அதாவது இஸ்ரேலின் எதிரி நாடான கத்தாரில் குறித்த பெண் சிக்கியுள்ளார்.
ஆனால், அந்தப் பெண்ணின் தரப்பு அவருக்கு சாதகமாகவே பேசியுள்ளது. கரீம் கானுக்கு ஆதரவளிப்பவர்களும், இது இஸ்ரேல் உளவு அமைப்பின் திட்டமிட்ட நடவடிக்கை என்றே விளக்கமளித்துள்ளனர்.

நெதன்யாகு மீதான கைதாணை ரத்து செய்யப்பட்டால், இந்த நெருக்கடியில் இருந்து கரீம் கான் தப்பலாம் என்றே கூறுகின்றனர். மட்டுமின்றி, கடந்த பல ஆண்டுகளில் இஸ்ரேலின் நடவடிக்கைகள் அனைத்தும் மனித உரிமைகளுக்கு எதிரானது என ICC பலமுறை அம்பலப்படுத்தி வந்ததால், Mossad உளவு அமைப்பு தொடர்ந்து குறிவைத்தும் வந்துள்ளது.
இதுவரையான விசாரணையில் கரீம் கானுக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் எதுவும் சிக்கவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், கரீம் கானின் சட்டத்தரணி தொழில் பாதிக்கலாம் என்றே கூறுகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |