அமெரிக்கா-ஈரான் சமாதான பேச்சுவார்த்தையை மாற்றிய நெத்தன்யாகுவின் தொலைபேசி அழைப்பு
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சமாதான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று கொண்டிருந்தபோது, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் தொலைபேசி அழைப்பு அனைத்தையும் மாற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா மற்றும் ஈரான் பிரதிநிதிகள், ஹார்முஸ் நீரிணையை திறப்பது, அணு திட்ட கட்டுப்பாடுகள், போர் சேதங்களுக்கு இழப்பீடு போன்ற முக்கிய அம்சங்களை விவாதித்துக் கொண்டிருந்தனர்.
பேச்சுவார்த்தைகள் நல்ல முன்னேற்றம் அடைந்திருந்த நிலையில், நெதன்யாகு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பை நேரடியாக தொடர்பு கொண்டார்.
அந்த அழைப்பில், “ஈரானுக்கு எந்தவித சலுகையும் வழங்கக்கூடாது. அவர்கள் மீது கடுமையான அழுத்தம் தொடர வேண்டும்” என்று நெதன்யாகு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால், அமெரிக்காவின் நிலைப்பாடு திடீரென மாறி, பேச்சுவார்த்தைகள் சிக்கலில் சிக்கின.
ஈரான் பிரதிநிதிகள், “இது அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை, ஆனால் இஸ்ரேல் தலையீடு செய்கிறது” என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், பேச்சுவார்த்தை சூழல் பதற்றமாக மாறியது.
இஸ்ரேல்-ஈரான் மோதல், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஹார்முஸ் நீரிணையின் வழியாக உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் கடந்து செல்வதால், இந்த பேச்சுவார்த்தைகள் உலக பொருளாதாரத்துக்கும் மிக முக்கியமானவை.
நெதன்யாகுவின் அழைப்பு, அமெரிக்காவின் முடிவுகளை மாற்றியதால், சமாதான முயற்சிகள் எவ்வாறு முன்னேறும் என்பது இன்னும் தெளிவாக இல்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
#USIranTalks #Netanyahu #IsraelIranWar #MiddleEastConflict #PeaceNegotiations #Trump #StraitOfHormuz