ஈரானுக்கு எதிரான போரில் உலக நாடுகள் இணைய வேண்டும்: பிரதமர் நெதன்யாகு அழைப்பு
ஈரானுக்கு எதிரான போர் நடவடிக்கைகளில் உலக நாடுகள் இணையமாறு இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார்.
நெதன்யாகு அழைப்பு
ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போர் நடவடிக்கை கடந்த 20 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஈரானுக்கு எதிரான போர் நடவடிக்கையில் உலக நாடுகள் தங்களையும் இணைத்து கொள்ள வேண்டும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளுக்கு மட்டுமன்றி ஐரோப்பா உட்பட பல நாடுகளுக்கு ஈரான் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருவதாக நெதன்யாகு சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்த அழைப்பில், ஈரான் ஒட்டுமொத்த உலகத்தையும் ஆபத்தில் ஆழ்த்துகிறது.
“பிற நாடுகளின் தலைவர்களும் ஈரானுக்கு எதிரான போரில் இணைய வேண்டிய நேரம் இது.
பல நாடுகளின் தலைவர் ஏற்கனவே இந்த திசையை நோக்கி நகர தொடங்கியுள்ளனர்.” ஆனால் ஈரானுக்கு எதிரான போர் நடவடிக்கையில் கூடுதல் நாடுகள் இணைவது அவசியமாகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |