கத்தார் ஹமாஸுக்கு நிதியளித்து நடத்துகிறது - நெதன்யாகு கடும் விமர்சனம்
ஹமாஸை கத்தார் நடத்துவதாகவும், அதற்கு நிதி அளிப்பதாகவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விமர்சித்துள்ளார்.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் 100 நாட்களை கடந்து நீடித்து வருகிறது. கத்தார் இப்போரில் முக்கிய மத்தியஸ்தர் பாத்திரத்தை வகிக்கிறது.
அதன் ஒருபகுதியாக இம்மாத தொடக்கத்தில் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது. ஆனால், நெதன்யாகு கத்தாரின் மத்தியஸ்தர் பாத்திரத்தை விமர்சித்துள்ளார்.
Tomer Appelbaum Haaretz/Pool
அவர் கூறுகையில், 'கத்தார் ஹமாஸை நடத்துகிறது மற்றும் நிதியளிக்கிறது. மேலும், காசாவில் இன்னும் கைதிகளாக இருக்கும் இஸ்ரேலிய கைதிகளை விடுவிக்க, பாலஸ்தீனிய குழுவிற்கு அழுத்தம் கொடுக்க இந்த நிலைப்பாட்டை பயன்படுத்த வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
கத்தாரில் பல மூத்த ஹமாஸ் உறுப்பினர்கள் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
AFP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |