போர் காரணமாக சொல்லவில்லை - புற்றுநோய் பாதிப்பு குறித்து அறிவித்த நெதன்யாகு
ஈரான் மற்றும் இஸ்ரேல், அமெரிக்கா இடையே நடைபெற்று வந்த 6 வார கால போரில் கடந்த ஏப்ரல் 8 ஆம் திகதி ஏற்பட்ட தற்காலிக போர் நிறுத்தம் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த போரின் போது ஈரானின் தாக்குதலில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உயிரிழந்து விட்டதாக தகவல்கள் பரவியது.

தான் உயிருடன் இருக்கிறேன் என்பதை நிரூபிப்பதற்காக அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வந்தனர்.
இந்நிலையில், தனக்கு புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு இருந்ததாகவும், தற்போது அதிலிருந்து முழுவதுமாக குணமடைந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
புற்றுநோயில் இருந்து மீண்ட நெதன்யாகு
மேலும், போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது அதனை வெளியிட்டிருந்தால் ஈரானிய பயங்கரவாத ஆட்சி இஸ்ரேலுக்கு எதிராக மேலும் பொய்ப் பிரச்சாரத்தைப் பரப்பி இருக்கும். அதை தடுப்பதற்காகவும், இதன் வெளியீட்டை 2 மாதங்களுக்குத் தாமதப்படுத்தக் கோரியிருந்தேன்"என தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில், "ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, வீங்கியிருந்த தீங்கற்ற புரோஸ்டேட் சுரப்பிக்காக எனக்கு வெற்றிகரமான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அன்று முதல் நான் வழக்கமான மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறேன்.
היום התפרסם הדו״ח הרפואי השנתי שלי.
— Benjamin Netanyahu - בנימין נתניהו (@netanyahu) April 24, 2026
ביקשתי לעכב את פרסומו בחודשיים כדי שהוא לא יפורסם בשיא המלחמה על מנת שלא לאפשר למשטר הטרור באיראן להפיץ עוד תעמולת כזב נגד ישראל.
אני מבקש לשתף אתכם בשלושה דברים:
1 - ברוך השם, אני בריא.
2 - אני בכושר גופני מצויין.
3 - הייתה לי בעיה…
தற்போது மிகவும் ஆரோக்கியமாக உள்ளேன். கடவுளுக்கு நன்றி. ஜெருசலேமில் உள்ள ஹதாசா மருத்துவமனையின் மருத்துவர்களுக்கும் அற்புதமான மருத்துவக் குழுக்களுக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன்.
இஸ்ரேல் குடிமக்களே, உங்களிடமிருந்து எனக்கு ஒரே ஒரு வேண்டுகோள் மட்டுமே உள்ளது: உங்கள் உடல்நலத்தைப் பேணுங்கள். பரிசோதனை செய்துகொள்ளுங்கள், மருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |