லெபனானுடன் பேச்சுவார்த்தையை தொடங்கிய இஸ்ரேல்: நெதன்யாகு அறிவிப்பு
லெபனானுடன் அமைதி பேச்சுவார்த்தை தொடங்கி இருப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
லெபனானுடன் நேரடி பேச்சுவார்த்தை
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றங்கள் சற்று தணிய தொடங்கியுள்ளன, ஈரான் - அமெரிக்கா இடையே இரண்டு வார கால போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஆனால் லெபனான் மீதான தாக்குதல் தொடரும் என்று இஸ்ரேல் அறிவித்து இருந்தது.
இந்நிலையில் சண்டையை நிறுத்துவதற்கான நேரடி பேச்சுவார்த்தையை நடத்த இஸ்ரேலிய அதிகாரிகளுக்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அனுமதியளித்துள்ளார்.

லெபனான் தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்ட தொடர்ச்சியான கோரிக்கைகளை தொடர்ந்து இந்த முடிவானது எடுக்கப்பட்டு இருப்பதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இது தொடர்பாக அவர் அளித்த தகவலில், பேச்சுவார்த்தையை விரைவாக நடத்த உத்தரவிட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையானது இரண்டு முக்கிய நோக்கங்களை கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஹெஸ்புல்லா ஆயுதக் குழுக்களின் கட்டமைப்பை கலைத்து வடக்கு பகுதி இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது ஆகும்.
அத்துடன் இரண்டு நாடுகளுக்கு இடையே சுமுகமான உறவை உருவாக்குதல் ஆகியவையே முக்கிய நோக்கமாக பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |