போர் வெறியுடன் இஸ்ரேல்... நெதன்யாகுவுக்கு சவுதி பட்டத்து இளவரசரின் பதில்

Benjamin Netanyahu Saudi Arabia Yemen
By Arbin Oct 14, 2026 03:22 AM GMT
Report

Netanyahu Wants To Join Saudi's War: நெதன்யாகு சவுதியின் போரில் இணைய விரும்புகிறார்.

அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக ஈரான் மீதான தீவிர குண்டுவீச்சு நடவடிக்கைகள் தணிந்துள்ள நிலையில், பொதுத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் இஸ்ரேலியப் பிரதமர் இன்னொரு போர்க்களத்தைத் தேடுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலின் திட்டம்

பாலஸ்தீனத்தின் காஸா, பின்னர் லெபனான், தற்போது ஏமனில் ஹவுதிகளுக்கு எதிராக சவுதி அரேபியா நடத்தி வரும் நடவடிக்கையில் இணைய அனுமதி கோரி, அமெரிக்காவின் மத்தியஸ்தம் மூலம் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அந்நாட்டை அணுகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போர் வெறியுடன் இஸ்ரேல்... நெதன்யாகுவுக்கு சவுதி பட்டத்து இளவரசரின் பதில் | Netanyahu To Join Saudi War

ஆனால், ஏமனில் இஸ்ரேல் இராணுவ ரீதியாக ஈடுபட முன்வைத்த திட்டத்தை, சவுதி அரேபியாவின் நடைமுறைத் தலைவரும் பட்டத்து இளவரசருமான முகமது பின் சல்மான் எதிர்த்துள்ளார்;

ஏனெனில், இச்செயல் அந்நாட்டு மக்களிடையே கடும் எதிர்வினையை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் அஞ்சுவதாகத் தகவல் கசிந்துள்ளது.

அமெரிக்காவின் நட்பு நாடுகளான இஸ்ரேலுக்கும் சவுதிக்கும் இடையிலான ராணுவ ஒத்துழைப்பு, அவற்றின் பிராந்திய உறவுகளை வலுப்படுத்துவதுடன், எதிர்காலத்தில் இயல்புநிலை ஒப்பந்தம் ஒன்றுக்கான வழிவகுக்கும் என்றும் இஸ்ரேல் நம்பியிருந்தது.

Mad Max திரைப்பட பாணியில்... சவுதி ஆதரவுப் படைகளும் ஹவுதிகளும் பாலைவனத்தில் நேருக்கு நேர்

Mad Max திரைப்பட பாணியில்... சவுதி ஆதரவுப் படைகளும் ஹவுதிகளும் பாலைவனத்தில் நேருக்கு நேர்

சமீப மாதங்களில் அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் ட்ரம்ப், ஆபிரகாம் உடன்படிக்கையில் கையெழுத்திடுமாறு சவுதி அரேபியாவைத் தொடர்ந்து ஊக்குவித்து வந்தபோதிலும், சவுதிக்கும் இஸ்ரேலுக்கும் இடையே எந்தவிதமான முறையான தூதரக உறவுகளும் இல்லை.

பாலஸ்தீன அரசு ஒன்றை அமைப்பது உள்ளிட்ட பாலஸ்தீனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதிலேயே உறவு இயல்பாக்கம் தங்கியுள்ளது என்று சவுதி நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது; ஆனால், அத்தகைய அரசு அமைவதைத் தடுப்பதில் தாம் தொடர்ந்து போராட இருப்பதாக நெதன்யாகு தனது சமீபத்திய தேர்தல் பிரச்சாரக் கருத்துகளில் உறுதியளித்துள்ளார்.

போர் வெறியுடன் இஸ்ரேல்... நெதன்யாகுவுக்கு சவுதி பட்டத்து இளவரசரின் பதில் | Netanyahu To Join Saudi War

எண்ணெய் வளம் மிக்க சவுதி அரேபியாவின் விமானப் போக்குவரத்துத் துறையைப் பாதித்துள்ள தொடர்ச்சியான ஹவுதி தாக்குதல்களுக்கு மத்தியில், இஸ்ரேலிய நகர்வுகள் நிராகரிக்கப்பட்டதாக வெளியான தகவல்கள் குறித்து சவுதி அதிகாரிகள் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை;

இதற்கிடையில், ரியாத் சர்வதேச விமான நிலையத்தின் மூடல் சனிக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளதுடன், விமான நிறுவனங்களும் தங்கள் சேவைகளை ரத்து செய்துள்ளன.

சவுதியுடன் இயல்புநிலை

இளவரசர் சல்மான், பட்டத்து இளவரசர் என்ற தனது பொறுப்புடன் சவுதி அரேபியாவின் பிரதமராகவும் செயல்பட்டு வருகிறார்; எனவே, அவரது ஒப்புதல் இன்றி நெதன்யாகு அரசாங்கம் போரில் ஈடுபடுவதற்கான அனுமதியைப் பெறுவது சாத்தியமில்லை.

போர் வெறியுடன் இஸ்ரேல்... நெதன்யாகுவுக்கு சவுதி பட்டத்து இளவரசரின் பதில் | Netanyahu To Join Saudi War

இருப்பினும், சவுதி உடனான உறவுகளை இயல்புநிலைக்குக் கொண்டுவருவதே தனது இலக்கு என்று இஸ்ரேலியப் பிரதமர் தொடர்ச்சியாக கூறி வருகிறார்.

இஸ்ரேலின் Haaretz செய்தி நிறுவனத்தின் தகவலின் அடிப்படையில், 2023-ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்தில் சவுதியும் இஸ்ரேலும் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு நெருக்கமாக இருந்தன;

சேவைகளை ரத்து செய்யும் விமான நிறுவனங்கள்... மூடப்படும் சவுதி விமான நிலையம்

சேவைகளை ரத்து செய்யும் விமான நிறுவனங்கள்... மூடப்படும் சவுதி விமான நிலையம்

அந்த ஆண்டின் அக்டோபர் 7-ஆம் திகதி ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்துவதற்கு முந்தைய வாரங்களில், அக்குழுவுடனான மோதலைத் தீவிரப்படுத்துவதைத் தவிர்த்ததற்கு நெதன்யாகு முயன்றதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று என்றே கூறுகின்றனர்.

மட்டுமின்றி, ஹமாஸின் திட்டம் குறித்து நெதன்யாகுவை முதலில் எச்சரித்ததே சவுதி இளவரசர் என்றே வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் சமீபத்திய அறிக்கை ஒன்று கூறுகிறது.

ஆனால் பல்வேறு அரசியல் காரணங்களால், அந்த எச்சரிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று இஸ்ரேலியப் பிரதமர் முடிவு செய்ததுடன், ஹமாஸ் தாக்குதலை அனுமதித்தார் என்ற குற்றச்சாட்டுகளும் தற்போது முன்வைக்கப்படுகிறது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US