ஈரான்-அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம்: நெதன்யாகு-ட்ரம்ப் இடையே மோதல்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகிய நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் இடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் உருவாகியுள்ளன.
நெதன்யாகு, ஈரானை வீழ்த்தும் நோக்கில் ட்ரம்புடன் இணைந்து போரில் ஈடுபட்டார். ஆனால், அமெரிக்கா தற்போது போரிலிருந்து விலகி, ஈரானுடன் சமாதான ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இதனால், இஸ்ரேலின் நடவடிக்கைகள், குறிப்பாக லெபனானில் ஹிஸ்புல்லா மீது நடத்தப்படும் தாக்குதல்கள், கட்டுப்படுத்தப்படுகின்றன.
இஸ்ரேல் அதிகாரிகள், “இந்த ஒப்பந்தம் இஸ்ரேலுக்கு மிக மோசமானது” எனக் கூறியுள்ளனர்.
ட்ரம்ப், நெதன்யாகுவை "f*cking crazy" எனக் குறிப்பிட்டு, பெய்ரூட் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என எச்சரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல், ஒப்பந்தத்தால் கட்டுப்படுத்தப்படமாட்டோம், எங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்வோம் என அறிவித்துள்ளது. நெதன்யாகு, “இஸ்ரேலின் பாதுகாப்பு நலன்களை நான் காப்பாற்றுவேன்” எனக் கூறியுள்ளார்.
இந்த ஒப்பந்தம் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கிறது. வெள்ளிக்கிழமை இறுதி ஒப்பந்தம் கையெழுத்தானப்பின், முழுமையாக திறக்கப்பட்டு எப்போதும்போல கட்டணமில்லா கப்பல் போக்குவரத்து தொடரும் என கூறப்படுகிறது.
ஆனால், ஈரான் அணு திட்டம், ஏவுகணை திட்டம் மற்றும் பிராந்திய ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவு போன்ற முக்கிய பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை.
இந்நிலையில், ட்ரம்ப் இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவார் என்ற நம்பிக்கை இஸ்ரேல் மக்களிடம் குறைந்துள்ளதாக சமீபத்திய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |