ஐ.நா மன்றத்தில் பேச வந்த நெதன்யாகு... அடுத்த நிமிடம் நடந்த சம்பவம்: கவனம் ஈர்த்த காணொளி
ஐ.நா மன்றத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது உரையைத் தொடங்கியதும், பல நாடுகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் உயரதிகாரிகள் என மொத்த அரங்கமும் சில நிமிடங்களில் வெளியேறியது தற்போது உலகம் முழுக்க பேசு பொருளாக மாறியுள்ளது.
மோசமான தாக்குதல் நடவடிக்கை
நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 79வது அமர்வு முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த அமர்வின் போதே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
As Israeli PM Benjamin Netanyahu came to address the 79th session of the UN General Assembly, many delegations walked out in protest. pic.twitter.com/xZ2R99ND7P
— Al Jazeera English (@AJEnglish) September 27, 2024
இஸ்ரேல் ராணுவம் காஸா மீது முன்னெடுத்துவரும் மிக மோசமான தாக்குதல் நடவடிக்கை, தற்போது லெபனான் மீது தொடங்கப்பட்ட வான் தாக்குதல் என பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 42,252 என்றே கூறப்படுகிறது. கடந்த சில தினங்களாக லெபனான் மீதும் தொடர் தாக்குதலை இஸ்ரேல் முன்னெடுத்து வருகிறது.
தலைவர்கள் மற்றும் உயரதிகாரிகள் கூட்டம் கூட்டமாக வெளியேறிய போதும், பிரதமர் நெதன்யாகு தனது உரையை தொடர்ந்துள்ளார். மட்டுமின்றி, அடுத்து உரை நிகழ்த்துபவர் இஸ்ரேல் பிரதமர் என அறிவிக்கப்பட்டதும், அரங்கம் அதிர கடும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தது.
விளக்கமளிக்க வேண்டும்
இது ஒருபுறம் இருக்க, இஸ்ரேலிய பிரதமர் நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகம் அருகே போர் எதிர்ப்பு போராட்டங்களை எதிர்கொண்டார். காஸா மீது இஸ்ரேல் ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஐ.நா மன்றத்தில் இந்த 89வது அமர்வில் கலந்துகொள்ளும் எண்ணம் தமக்கு இருக்கவில்லை என்றும், ஆனால் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்ற காரணத்தாலையே அமர்வில் கலந்துகொள்ளும் முடிவுக்கு வந்ததாகவும் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
மேலும், காஸா மற்றும் லெபனானில் இஸ்ரேலின் நடவடிக்கைகளை பாதுகாப்பதற்கான தனது உறுதிப்பாட்டை அவர் வலியுறுத்தினார். அத்துடன் இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கைகளை தடையின்றி தொடரும் என்றும் அவர் அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |