ஈரானுடன் மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை: நெதன்யாகு விடுத்த பகீர் எச்சரிக்கை
ஈரானுக்கு எதிரான மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேலிய பிரதமர் எச்சரிக்கை
அமெரிக்க-இஸ்ரேலிய படைகள் ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல் சமீபத்திய பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் CBS செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ஈரான் போர் முழுமையாக முடிவடையவில்லை என்றும், ஈரானில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல பணிகள் இன்னும் மீதம் இருப்பதாக இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
60 மினிட்ஸ் என்ற நிகழ்ச்சியில் பேசிய நெதன்யாகு, ஈரானுக்கு எதிராக எடுக்கப்பட்ட இராணுவ மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகள் ஈரானின் அச்சுறுத்தல் போக்கை முழுமையாக கட்டுப்படுத்தவில்லை என்று தெரிவித்தார்.

[HNRTFRO[
அமைதிக்கான நிரந்தர தீர்வு
இந்த மோதல் உண்மையில் முடிவுக்கு வரவேண்டும் என்றால், ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அந்நாட்டின் எல்லையில் இருந்து வெளியே கொண்டு வர வேண்டும் என்று நெதன்யாகு சுட்டிக்காட்டியுள்ளார்.
அணுசக்தி அச்சுறுத்தல் மட்டுமின்றி மத்திய கிழக்கில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு படைகளும் முற்றிலுமாக ஒடுக்கப்பட வேண்டும் என்று நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
அணுசக்தி திட்டத்தின் அடிப்படை கட்டமைப்பு மற்றும் மூலப்பொருட்கள் இன்னும் ஈரானிடம் அப்படியே இருப்பதால், அங்கு செய்ய வேண்டிய வேலைகள் இன்னும் நிறைய மீதம் இருப்பதாக நெதன்யாகு தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |