நெட்ஃபிளிக்ஸ் Vs பாரமவுண்ட்: வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை வாங்க கடும் போட்டி
வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை வாங்க நெட்ஃபிளிக்ஸ் மற்றும் பாரமவுண்ட் நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி வெடித்துள்ளது.
வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்
பிரபலமான ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃபிளிக்ஸ்(Netflix), பிரபலமான வார்னர் பிரதர்ஸ்(Warner Bros) நிறுவனத்தை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் சமீபத்தில் கையெழுத்திட்டதாக தகவல் வெளியானது.

இந்த கையப்படுத்துதல் ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு சுமார் $82.7 பில்லியன் என மதிப்பிடப்பட்டு இருந்ததாக கூறப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி ஸ்டூடியோக்கள், HBO Max ஸ்ட்ரீமிங் சேவை மற்றும் HBO நெட்வொர்க் ஆகியவற்றை அதிகாரப்பூர்வமாக நெட்ஃபிளிக்ஸ் கைப்பற்றும் எனவும் கூறப்பட்டது.
நெட்ஃபிளிக்ஸ் மற்றும் பாரமவுண்ட் இடையே கடும் போட்டி
இந்நிலையில் பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் வாங்க நெட்ஃபிளிக்ஸ் மற்றும் பாரமவுண்ட் நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி வெடித்துள்ளது.

Warner Bros. Discovery நிறுவனத்தை வாங்க பாரமவுண்ட் நிறுவனம்(Paramount) நிறுவனம் சுமார் $108.4 பில்லியன் மதிப்பிலான புதிய முன்மொழிவை வெளியிட்டுள்ளது.
மேலும் நெட்பிளிக்ஸ் இதற்கு முன்னர் மேற்கொண்ட சுமார் $82.7 பில்லியன் மதிப்பிலான ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கினால், நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு Break-up தொகையாக சுமார் $5.8 பில்லியன் வழங்கவும் தயாராக இருப்பதாக Paramount நிறுவனம் அறிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |