கலிபோர்னியா காட்டுத்தீ: மேகன் மார்க்கல் புதிய நெட்பிக்ஸ் தொடர் ஒத்திவைப்பு
கலிபோர்னியா காட்டுத்தீயால் மேகன் மார்க்கலின் புதிய தொடர் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மேகன் மார்க்கலின் தொடர் தள்ளி வைப்பு
கலிபோர்னியாவின் பல்வேறு பகுதிகளை தற்போது தாக்கி வரும் பேரழிவு தரும் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, மேகன் மார்க்கலின் வரவிருக்கும் தொடரான "With Love" வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக நெட்ஃபிக்ஸ் அறிவித்துள்ளது.
ஜனவரி 15 ஆம் திகதி முதல் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த இந்த 8 அத்தியாய தொடர், தற்போது மார்ச் 4 ஆம் திகதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
நெட்ஃபிக்ஸின் அதிகாரப்பூர்வ செய்தி அறிக்கையில்,இந்த திட்டத்தை தள்ளிவைப்பதில் தனக்கு ஆதரவு அளித்த நெட்ஃபிக்ஸ் கூட்டாளிகளுக்கு மேகன் நன்றி தெரிவித்துள்ளார்.
மேகன் மார்க்கல் வெளியிட்ட தகவலில் “கலிபோர்னியா என் சொந்த மாநிலம் என்பதால், காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளில் கவனம் செலுத்தும் வகையில், தொடரின் வெளியீட்டை தள்ளி வைப்பதற்கு என் கூட்டாளிகள் ஆதரவு அளித்ததற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |