கோல்மழை பொழிந்த நெதர்லாந்து அணி! திஜ்ஜானி ஹாட்ரிக்..நொறுங்கிய கிரீஸ்
Netherlands beat greece in national league: கிரீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 7-0 என்ற கணக்கில் நெதர்லாந்து வெற்றி பெற்றது.
ஆம்ஸ்டர்டாமில் நடந்து நேஷன்ஸ் லீக் போட்டியில் நெதர்லாந்து அணி 7-0 என்ற கோல் கணக்கில் கிரீஸ் அணியை வீழ்த்தியது.
நேஷன்ஸ் லீக் கால்பந்து
நெதர்லாந்து மற்றும் கிரீஸ் தேசிய அணிகளுக்கு இடையிலான நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டி ஆம்ஸ்டர்டாமில் நடந்தது.

ஆட்டத்தின் 6வது நிமிடத்திலேயே நெதர்லாந்து வீரர் கிரிசென்சியோ சம்மர்வில்லே கோல் அடித்தார். அடுத்த 6 நிமிடங்களில் சக அணி வீரர் திஜ்ஜானி ரெய்ஜ்ந்தர்ஸ் கோல் அடித்தார்.
18 மற்றும் 33வது நிமிடங்களில் இரண்டு கோல்கள் என திஜ்ஜானி ரெய்ஜ்ந்தர்ஸ் (Tijjani Reijnders) ஹாட்ரிக் அடித்தார்.
அபார வெற்றி
ஜூரியின் டிம்பர் 40வது நிமிடத்தில் கோல் அடிக்க, நெதர்லாந்து அணி 5-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
கிரீஸ் அணி கோல் அடிக்க முடியாமலும், நெதர்லாந்தை தடுக்க முடியாமலும் திணற டிம்பர் 59வது நிமிடத்திலும், டோன்யேல் மலென் 61வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
இதன்மூலம் நெதர்லாந்து அணி 7-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது. மேலும், இந்த வெற்றியின் மூலம் 11 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
