தீவிரமடையும் போர்:உக்ரைனுக்கு மொத்த விமானத்தையும் அனுப்பி வைத்துள்ள நாடு
நெதர்லாந்து தன்னிடம் உள்ள அனைத்து F-16 ரக போர் விமானத்தையும் உக்ரைனுக்கு வழங்கி உதவியுள்ளது.
உக்ரைன் ரஷ்யா போர்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை தொடங்கி 18 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், போர் நிறைவடைவதற்கான எத்தகைய சூழலும் இதுவரை வெற்றிகரமாக கைகூடவில்லை.
இதற்கிடையில் அடிக்கடி உக்ரைனிய நகரங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் மற்றும் ட்ரோன் தாக்குதலை ரஷ்யா நடத்தி வருகிறது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக உக்ரைனும் ரஷ்யா மீது ட்ரோன் தாக்குதலை அவ்வப்போது அரங்கேற்றி வருகிறது.
மேலும் ரஷ்யாவை எதிர்த்து தொடர்ந்து சண்டையிட உக்ரைன் மேற்கத்திய நாடுகளிடம் தொடர்ந்து ஆயுத உதவி கோரி வருகிறது.
உக்ரைனுக்கு F-16 ரக போர் விமானம்
இந்நிலையில் நெதர்லாந்து தன்னிடம் உள்ள அனைத்து F-16 ரக போர் விமானத்தையும் உக்ரைனுக்கு அனுப்பி வைத்து உதவியுள்ளது.
அவற்றில் சிலவற்றை மட்டும் உக்ரைனிய வீரர்களின் பயிற்சிக்காக வைத்து இருப்பதாக நெதர்லாந்து நட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் Kajsa Ollongren தெரிவித்துள்ளார்.
?? The Netherlands will hand over almost all its F-16 fighter jets to Ukraine, but will keep a few for training Ukrainian pilots, said Minister of Defence of the Netherlands Kajsa Ollongren.
— NEXTA (@nexta_tv) August 25, 2023
"We have 42 airplanes, but some of them will go for training and the rest will go to… pic.twitter.com/flSHopI4aK
இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ள தகவலில், தங்களிடம் 42 போர் விமானங்கள் இருப்பதாகவும், அவற்றில் சிலவற்றை தவிர மற்ற அனைத்தையும் உக்ரைனிய விமானப்படைக்கு அனுப்பி வைத்து இருப்பதாக தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |