போலி அடையாளங்களுடன் சர்வதேச அமைப்புக்குள் ஊடுருவ முயன்ற ரஷ்ய உளவாளி!
ரஷ்ய உளவாளி ஒருவர், போலியான பெயர் முதலான அடையாளங்களுடன் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஊடுருவ முயன்றதாக நெதர்லாந்து உளவுத்துறை தெரிவித்துள்ளது.
நெதர்லாந்தின் Hague நகரிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பயிற்சி பெறும் ஒரு மாணவரைப் போல பணிக்கு விண்ணப்பித்த Viktor Muller Ferreira என்பவர், தன்னை ஒரு பிரேசில் குடிமகனாக காட்டிக்கொண்டு, போலியான அடையாளங்களைக் கொடுத்துள்ளார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும் அவரை பயிற்சிக்காக ஏற்றுக்கொண்டுள்ளது. பிறகுதான் அவரது உண்மையான பெயர் Sergey Vladimirovich Cherkasov என்பதும், அவர் ஒரு ரஷ்ய உளவாளி என்பதும் தெரியவந்துள்ளது.
அதைத் தொடர்ந்து, நெதர்லாந்திலுள்ள விமான நிலையம் ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்ட Cherkasov, ஒரு விரும்பத்தகாக அந்நியர் என்று அறிவிக்கப்பட்டு, உடனடியாக அடுத்த விமானத்திலேயே பிரேசிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
பிரேசிலில் Cherkasov மீது முறைப்படி நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.