எரிபொருள் சந்தையை சீரமைக்க., 7 லட்சம் பீப்பாய்கள் எண்ணெயை விடுவித்த நெதர்லாந்து
Netherlands Release 7 lakhs barrels of oil: 7 லட்சம் பீப்பாய்கள் எண்ணெயை நெதர்லாந்து அரசு விடுவித்துள்ளது.
7 லட்சம் பீப்பாய்கள் எண்ணெய்
உலகளாவிய அளவில் நிலவி வரும் ஆற்றல் பற்றாக்குறையை தொடர்ந்து நெதர்லாந்து அரசு சுமார் 7 லட்சம் பீப்பாய்கள் எண்ணெயை சர்வதேச விநியோக சங்கிலியில் விடுவித்து இருப்பதாக அறிவித்துள்ளது.
விடுவிக்கப்பட்ட பீப்பாய்களில் கிட்டத்தட்ட பாதி அளவு டீசல் எரிபொருள் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச ஆற்றல் முகமை(IEA) தங்களது உறுப்பு நாடுகளுடன் இணைந்து சர்வதேச எரிபொருள் சந்தையில் நிலவும் சீரற்ற தன்மையை சரி செய்யும் நோக்கில் முக்கிய நகர்வுகளை முன்னெடுத்து வருகிறது.


அதன் ஒரு பகுதியாகவே நெதர்லாந்து அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 53.6 லட்சம் பீப்பாய்களை வழங்குவதாக நெதர்லாந்து உறுதியளித்து இருந்த நிலையில், தற்போது விடுத்துள்ள இந்த 7 லட்சம் பீப்பாய்கள் மூலம் நெதர்லாந்து தனது முழு இலக்கையும் நிறைவேற்றியுள்ளது.
இந்நிலையில் மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்கள் காரணமாகவே உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையில் கடும் அழுத்தம் ஏற்பட்டு இருப்பதாக காலநிலை மற்றும் பசுமை வளர்ச்சித் துறை அமைச்சர் ஸ்டீண்ட்ஜே வான் வெல்டோவன் தெரிவித்துள்ளார்.
இந்த பதற்றங்கள் தணியும் வரை சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையேற்றமும் விநியோக பற்றாக்குறையும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.