சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன?
சீனா, துருக்கியை தொடர்ந்து, ஐரோப்பிய நாடொன்று பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கி வருவது தெரியவந்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூர்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 ஆம் திகதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கையை மூலம் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கியழித்தது.
இதனையடுத்து, இரு நாடுகளும் ட்ரோன்கள் மூலம் தாக்கிக்கொண்டன. கடந்த மே 10 ஆம் திகதி போர் நிறுத்தம் ஏற்பட்டதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே அமைதி நிலவி வருகிறது.
ஆபரேஷன் சிந்தூருக்கு பின்னர் துருக்கி, அஜர்பைஜான் உள்ளிட்ட நாடுகளுக்கு பாகிஸ்தானை ஆதரித்து வந்தன. இதன் காரணமாக, இரு நாடுகளையும் இந்திய வணிகர்கள் புறக்கணிக்க தொடங்கினர்.
இந்த நாடுகளுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டருந்த இந்திய பயணிகள், தங்களது பயணத்தை ரத்து செய்ய தொடங்கினர். இதன் விளைவாக, இரு நாடுகளும் பெரிய அளவிலான பொருளாதார இழப்பை சந்தித்தன.
மேலும், சீனாவிற்கு அடுத்தபடியாக துருக்கியும் பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கியது தெரியவந்தது.
நெதர்லாந்து
இதேபோல், ஐரோப்பிய நாடான நெதர்லாந்தும் பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் தனது ஆயுதக் கையிருப்பில் 81 சதவீதத்தை சீனாவிடமிருந்தும், 5.5 சதவீத ஆயுதங்கள் நெதர்லாந்திலிருந்தும், 3.8 சதவீத ஆயுதங்கள் துருக்கியிடமிருந்தும் பெற்று வருகிறது.
பாகிஸ்தான் கடற்படைக்கு தேவையான ஆயுதங்களை நெதர்லாந்து வழங்கியது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், 6 நாள் பயணமாக ஐரோப்பா சென்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் ஷங்கர், முதலில் நெதர்லாந்திற்கு சென்றுள்ளார்.
இந்தியா தனது பொருளாதார வலிமை மூலம், பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து உறவை பலவீனப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்தியா, நெதர்லாந்துடன் மட்டும் 22 பில்லியன் டொலருக்கு வர்த்தகம் செய்கிறது.
அதே நேரத்தில் பாகிஸ்தான் முழு ஐரோப்பாவுடனும் 15 பில்லியன் டொலர் மட்டுமே வர்த்தகம் செய்கிறது.
பாகிஸ்தான் மீது நெதர்லாந்திற்கு அரசியல் விருப்பம் இல்லாத நிலையில், இந்தியாவுடனான 22 பில்லியன் டொலர் வர்த்தகத்தை இழக்க நெதர்லாந்து விரும்பாது.
நெதர்லாந்து இந்தியாவின் பாதுகாப்பு சந்தையில் நுழைய விரும்பும் நிலையில், இந்தியாவும் அதற்கு விருப்பம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், பாகிஸ்தானுக்கு நெதர்லாந்து வழங்கும் ஆயுத உதவியை நிறுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |