நெதர்லாந்தில் குடியேறிய தமிழர்கள் வரலாறும் வாழ்வும்! சமகால வாழ்வியல் நிலை என்ன?
டச்சு தமிழர்கள் அல்லது ஹாலந்து தமிழர்கள் என்பவர்கள் நெதர்லாந்தில் வசித்து வரும் பரம்பரை தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
நெதர்லாந்தில் கிட்டத்தட்ட 20,000 தமிழர்கள் வசிக்கின்றனர், அதில் பெரும்பாலானோர் இலங்கை தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
காலனித்துவ காலம்
டச்சுக்காரர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான உறவு காலனித்துவ காலத்தில் இருந்து தொடங்குகிறது.
டச்சு கிழக்கிந்திய கம்பெனி ஆனது இலங்கையிலும், தென்னிந்தியாவிலும் செயல்பட்டு வந்தது.
1640 முதல் 1796 வரையிலான காலகட்டத்தில் இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்த பெரும்பாலான பகுதிகள் டச்சு ஆட்சி அதிகாரத்தின் கீழ் செயல்பட்டு வந்தன.
அப்போது பல டச்சு கடன் சொற்கள் இலங்கை தமிழ் மொழியில் ஊடுருவின.
நெதர்லாந்துக்கு படையெடுத்த தமிழர்கள்
1980 ஆண்டுகளில் தமிழர்கள் நெதர்லாந்துக்கு குடியேற தொடங்கினர். அவர்களில் பெரும்பாலானோர் நன்கு படித்த பணியாளர்கள், தொழிலதிபர்கள் மற்றும் மாணவர்களாக இருந்தனர்.
இலங்கையில் உள்நாட்டு போர் தொடங்கியதை அடுத்து 1984ம் ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் புலம்பெயர்ந்தவர்களாக நெதர்லாந்துக்கு பயணித்தனர்.
1984 முதல் 1987 வரையிலான காலக்கட்டத்தில் 3,500 தமிழர்கள் வரை நெதர்லாந்தில் குடியேறினர். இரண்டாவது அலையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் 1990 முதல் 1992ம் ஆண்டுகளில் நெதர்லாந்தில் புலம்பெயர்ந்தவர்களாக தஞ்சம் புகுந்தனர்.
1995ம் ஆண்டு நெதர்லாந்தில் இலங்கை தமிழர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்தது.
1996ம் ஆண்டு 5600 ஆக இருந்த தமிழர்கள் எண்ணிக்கையானது, 2010 ஆண்டு 10,346 ஆகவும், தற்போது 20,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் நெதர்லாந்தில் குடியேறி வசித்து வருகின்றனர்.
இருப்பிடம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
தங்கள் தகுதிக்கு குறைவானதாக இருந்தாலும், அவர்கள் வேலை வாய்ப்புகளில் அதிக ஆர்வம் கொண்டு இருப்பதால் நெதர்லாந்தில் டச்சு தமிழர்களின் வேலைவாய்ப்பின்மை குறைந்த அளவே காணப்படுகிறது.
மேலும், டச்சு தமிழர்கள் கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து இருப்பதோடு தங்களது குழந்தைகளின் கல்வியில் தனி கவனம் செலுத்தி வருகின்றனர்.
புலம்பெயர்ந்தவர்களாக குடியேறிய தமிழர்கள் Amsterdam போன்ற பெரிய நகரங்களில் இருந்து விலகி இருந்ததால், டச்சு தமிழர்கள் பெரும்பாலும் சிறிய நகரங்களான Zeist, Utrecht, Nieuwegein, Roermond, Den Bosch, Breda, Den Helder மற்றும் Hoorn ஆகிய நகரங்களிலேயே வசித்து வருகின்றனர்.
மத நம்பிக்கைகள்
நெதர்லாந்தில் வசித்துவரும் தமிழர்களில் பெரும்பாலானோர் “ஹிந்து” வழிபாட்டு முறையையே பின்பற்றுகின்றனர்.
Den Helder-ல் உள்ள விநாயகர் கோவில், Roermond-வில் உள்ள முருகன் கோவில் என நெதர்லாந்தில் தமிழ் வழிபாட்டு தெய்வங்களின் கோவில் உள்ளன.
நெதர்லாந்தில் கிறிஸ்தவர்கள் கத்தோலிக்க மற்றும் சுவிசேஷகர் தேவாலங்களின் கீழ் சிறுபான்மையினராக வாழ்ந்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |