பிரபல ஜரோப்பிய நாடான நெதர்லாந்தில் நாளை முதல் ஊரடங்கு! பிரதமர் சற்று முன் அறிவிப்பு
ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க நெதர்லாந்து, நாளை முதல் கடுமையான ஊரடங்கை அமுலுக்கு கொண்டு வருகிறது.
தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான வைரஸ், 89 நாடுகளில் பரவ துவங்கியுள்ளது.
குறிப்பாக பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் இதன் வேகம் அதிகமாக உள்ளது.
பிரித்தானியாவில் இந்த ஒமைக்ரான வைரஸால் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்த ஒமைக்ரான் பரவலை தடுக்க நெதர்லாந்து அரசு நாளை முதல் கடுமையான ஊரடங்கை அமுல்படுத்துகிறது.
இது குறித்து நாட்டின் பிரதமர் Mark Rutte சற்று முன்பு வெளியிட்ட அறிவிப்பில், வரும் திங்கட் கிழமை(20.12.2021) முதல் பள்ளிகள் மூடப்படும், நாளை(19.12.2021) காலை முதல் அத்தியாவசியமற்ற கடைகள், பார்கள், உணவகங்கள் மற்றும் பிற பொது இடங்கள் மூடப்படும்.
இந்த ஊரடங்கு குறைந்தது ஜனவரி 14-திகதி வரை இருக்கும், ஒமைக்ரான் மாறுபாடு மற்றும் கொரோனாவின் ஐந்தாவது அலை காரணமாக இதை தவிர்க்க முடியாது என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
இன்னும் சமீபத்திய கட்டுப்பாடுகள் குறித்து, முழுமையான விதிமுறைகள் அறிவிக்கப்படவில்லை. அதே சமயம் சிகையலங்கார கடைகள் மற்றும் ஜிம்கள் மூடப்படலாம் என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இதுவரை நெதர்லாந்தில் மொத்தமாக கொரோனாவால் 2950000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 20,370 பேர் உயிரிழந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.