வாஷிங்டன் மேயர் பதிவிட்ட உடனே நீக்கிய புகைப்படம்! திகைத்துப்போன நெட்டிசன்கள்: அட்மின் வேலையா இருக்குமோ?
அமெரிக்க சுதந்திர தினத்தை முன்னிட்டு வாஷிங்டன் டிசி மேயர் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டப்பட்ட புகைப்படத்தை கண்டு நெட்டிசன்கள் திகைத்துப்போயுள்ளனர்.
ஜூலை 4ம் திகதி அமெரிக்க சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைநகர் வாஷிங்டன் டிசி-யில் பாலிசேட் அணிகுப்பு உட்பட பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
இந்த நிகழ்வுகளில் வாஷிங்டன் டிசி மேயர் Muriel Bowser கலந்துக்கொண்டார். இதனையடுத்து Muriel Bowser தனது ட்விட்டர் பக்கத்தில் பாலிசேட் அணிவகுப்பின் சில புகைப்படங்களை பகிர்ந்தார்.
எனினும், அந்த பதிவில் பாலிசேட் அணிவகுப்பு நிகழ்வுக்கு சம்மந்தமே இல்லாத படங்களை அவர் வெளியிட்டதை கண்டு நெட்டிசன்கள் திகைத்துப்போயுள்ளனர்.
Muriel Bowser பகிர்ந்த 4 படங்களில், இரண்டு பாலிசேட் அணிவகுப்பு படங்கள், ஒன்று பாடகர் தி வீக்கெண்ட மற்றும் டோஜா கேட் ஆகியோரின் புகைப்படம். மற்றொன்று மெக்டொனால்ட்ஸ், கே.எஃப்.சி மற்றும் வெண்டியின் கார்ட்டூன் புகைப்படம்.
THIS TWEET MAYOR BOWSER JUST DELETED HELPPPPPVNCNCNDN?!;!(!;! pic.twitter.com/ecAPp2lA1j
— kleo :) (@appalachiabelle) July 4, 2021
எனினும், உடனே இந்த பதிவு ட்விட்டரிலிருந்து நீக்கப்பட்டது.
இது Muriel Bowser ட்விட்டர் பக்கத்தின் அட்மின் வேலையாக தான் இருக்கும் என நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.