மாம்பழம் சாப்பிட்ட பின்பு இந்த உணவுகளை எல்லாம் சாப்பிடாதீங்க! உடல் உபாதைகளை ஏற்படுத்தலாம்
உலகில் பெரும்பாலான மக்களுக்கு பிடித்த பழங்களில் மாம்பழமும் ஒன்று. அந்தளவிற்கு மாம்பழத்தை யாரும் அவ்வளவு சீக்கரம் வேண்டாம் என்று சொல்லமாட்டார்கள்.
குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், அவர்கள் கர்ப்பமாக இருக்கும் காலக்கட்டத்தில் மாம்பழங்களை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். அது உடல் நலத்திற்கும் நல்லது என்று பெரியவர்கள் கூறுவர். கர்ப்பிணிகள் மட்டுமின்றி, சாதரணமானவர்களும் சாப்பிடுவதன் மூலம் பல நன்மைகள் நம் உடலுக்கு கிடைக்கிறது.
ஆனால், அதுவே மாம்பழம் சாப்பிட்ட பின்பு சில உணவுகளை சாப்பிட்டால் அது உடல் உபாதைகளை ஏற்படுத்தும். இது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதைப் பற்றி கீழே பார்ப்போம்.
தண்ணீர்
பொதுவாக எது சாப்பிட்டாலுமே அடுத்து தண்ணீரை தான் தேடுவோம். ஆனால் மாம்பழம் சாப்பிட்ட பின்பு தண்ணீர் குடிக்க கூடாது. அது உடலுக்குள் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி, வயிற்றுவலி, அசிடிட்டி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
அதுவே மாம்பழம் சாப்பிட்ட அரைமணி நேரத்திற்கு பிறகு தண்ணீர் குடிக்கலாம், அது உடலுக்கு நல்லது.
தயிர்
ஒரு சிலருக்கு மாம்பழத்தை தயிருடன் சேர்ந்து சாப்பிடும் பழக்கம் உண்டு. அப்படி சாப்பிடும் போது, அதன் சுவையோ வேற லெவலில் இருக்கும். ஆனால், அது உடலுக்கு நல்லது கிடையாது.
ஏனெனில் மாம்பழம் வெப்பமானது, தயிர் குளிர்ச்சியானது. உடலில் வெப்பத்தையும், குளிரையும் ஒருசேர உருவாக்கும்போது சரும பிரச்சினைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
பாகற்காய்
பொதுவாக மாம்பழம் சாப்பிட்ட பின்பு கசப்பு தன்மை கொண்ட எதையும் சாப்பிடக் கூடாது. அதில் குறிப்பாக, பாகற்காய் போன்ற உணவுகளை சாப்பிடும்போது குமட்டல், வாந்தி, சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
காரமான உணவுகள் வேண்டாம்
மாம்பழம் சாப்பிட்ட பிறகு காரமான உணவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில், அது வயிற்றுப் பிரச்சனை, சருமத்தில் எதிர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்தி, முகப்பரு உண்டாகுவதற்கு வழிவகுத்துவிடும்.
குளிர் பானங்கள்
இது தான் மிகவும் தீங்கானது. மாம்பழம் சாப்பிட்ட பின்பு உடனே குளிர்பானம் சாப்பிடக் கூடாது. இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். மாம்பழத்தில் சர்க்கரை அதிகம் இருக்கிறது.
குளிர் பானங்களிலும் சர்க்கரை அதிகம் கலந்திருக்கும். நீரிழிவு நோயாளிகள் அப்படி மாம்பழம் சாப்பிடும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகும் வாய்ப்பு உள்ளது.