ரூ.1.21 லட்சத்தில் புதிய SP160 பைக்கை அறிமுகம் செய்துள்ள Honda
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனம் SP160 எனும் புதிய பைக்கை அறிமுகம் செய்துள்ளது.
இந்த பைக்கில் OBD2B emission விதிகளுக்கு ஏற்ப எஞ்சினில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
Bluetooth connectivity, navigation, digital instrument cluster மற்றும் dual disc brakes உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த பைக் இப்போது வருகிறது. இந்த பைக் இ20 பெட்ரோலிலும் இயங்கும்.
இந்த பைக் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. சிங்கிள் டிஸ்க் பிரேக் வேரியண்ட் விலை ரூ.1,21,951 ஆகவும், டூயல் டிஸ்க் பிரேக் வேரியண்ட் விலை ரூ.1,27,956 ஆகவும் உள்ளது. இரண்டு விலைகளும் எக்ஸ்-ஷோரூம் ஆகும்.
இந்த பைக் இப்போது நாடு முழுவதும் உள்ள HMSI டீலர்ஷிப்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
160சிசி பிரிவில், இந்த பைக் Yamaha FZ, Bajaj Pulsar P150, Suzuki Gixxer மற்றும் TVS Apache RTR160 2V ஆகியவற்றுடன் போட்டியிடும்.
இந்த பைக்கில் புளூடூத் கனெக்டிவிட்டியுடன் கூடிய புதிய 4.2-inch TFT display வழங்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பு Honda RoadSync app-உடன் இணக்கமானது, இது turn-by-turn navigation, call, SMS alerts மற்றும் music playback போன்ற அம்சங்களை வழங்குகிறது.
இந்த பைக்கில் USB Type-C charging port உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |