ரூ.11.11 லட்சத்தில் புதிய 2025 Hyundai Creta அறிமுகம்
ரூ.11.11 லட்சம் ஆரம்ப விலையில் புதிய 2025 Hyundai Creta SUV இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Hyundai Motors India நிறுவனம் அதன் பிரபலமான Mid Range SUV காரான Creta-வின் 2025 மொடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய ஹூண்டாய் க்ரெட்டா Level-2 ADAS உட்பட 70-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது. அதில் வேறு எந்த இயந்திர மாற்றங்களும் செய்யப்படவில்லை.
ஆனால், இந்த காரில் EX (O) மற்றும் SX பிரீமியம் ஆகிய இரண்டு புதிய வகைகளைச் சேர்த்துள்ளது. மேலும், EX (O) வேரியண்ட்டில் பனோரமிக் சன்ரூஃப் வழங்கியுள்ளது.
ரூ.11.11 லட்சம் விலையில் தொடங்கும் Creta, இப்போது E, EX, EX(O), S, S(O), SX, SX Tech, SX (O) மற்றும் SX Premium ஆகிய 9 வகைகளில் கிடைக்கிறது.
இது 6 single-tone மற்றும் ஒரு dual-tone வண்ண விருப்பங்களில் வருகிறது.
Hyundai Creta-வின் விலை ரூ .11.11 லட்சம் முதல் ரூ .20.42 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி).
வாங்குபவர்கள் அதிகாரப்பூர்வ டீலர்ஷிப்பிலிருந்து அல்லது ஓன்லைனில் ரூ.25,000 டோக்கன் தொகையை செலுத்தி முன்பதிவு செய்யலாம்.
இது Kia Seltos, Maruti Grand Vitara, Honda Elevate, Toyota Urban Cruiser Hyryder, Skoda Kushaq, MG Aster, Volkswagen Taigun மற்றும் Citroen C3 Aircross போன்றவற்றுடன் போட்டியிடுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |