க்ரூஸ் கண்ட்ரோல் அம்சங்களுடன் புதிய Kawasaki Versys 1100 டூரர் பைக்
கவாஸாகி இந்தியா (Kawasaki) நிறுவனம் 2025 Versys 1100 ஸ்போர்ட்ஸ் டூரர் பைக் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இது பழைய Versys 1000-க்கு பதிலாக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பழைய Versys 1000 ரூ.13.91 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனை செய்யப்பட்டது.
புதிய Versys 1100 மாடல் ரூ.12.90 லட்சத்தில் (எக்ஸ்ஷோரூம்) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது பழைய மாடலை விட ஒரு லட்சம் குறைவு.
வாடிக்கையாளர்கள் கவாஸாகி டீலர்ஷிப்பிற்கு சென்று பைக்கை முன்பதிவு செய்யலாம்.
இந்த adventure-tourer மோட்டார்சைக்கிளில் 1099cc inline-four cylinder engine பொருத்தப்பட்டு நீண்ட தூர சவாரி செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பைக் Triumph Tiger 1200, Ducati Multistrada V4 மற்றும் BMW R 1300 GS ஆகிய பைக் மாடல்களுடன் போட்டி போடும்.
இது traction control, multiple riding modes, all-LED lighting மற்றும் adjustable windscreen போன்ற நடைமுறை அம்சங்களைப் பெறுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
New 2025 Kawasaki Versys 1100, Kawasaki Tourer Bike