புதிய 2025 TVS Jupiter 110 ஸ்கூட்டர் அறிமுகம்., விலை என்ன தெரியுமா?
TVS Motor Company அதன் புதிய 2025 TVS Jupiter 110 ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
OBD-2B மாசு உமிழ்வு விதிகளின்படி TVS நிறுவனம் ஸ்கூட்டரை மேம்படுத்தியுள்ளது.
இந்த மாத இறுதிக்குள் நிறுவனம் தனது மீதமுள்ள இரு சக்கர வாகன போர்ட்ஃபோலியோவையும் புதுப்பிக்கும். எனக் கூறப்படுகிறது.
மாசு உமிழ்வு விதிகளின்படி வாகனங்களை அப்டேட் செய்ய ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு ஏப்ரல் 1 கடைசி நாளாகும்.
புதிய Jupiter 110 ஸ்கூட்டர் 4 வகைகளில் மற்றும் 7 வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.
இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.76,691-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய தலைமுறை எஞ்சின், புதிய வடிவமைப்பு மற்றும் முன்பை விட அதிக சிறப்பம்சங்களுடன் புதிய ஜூபிடர் 110 விற்பனைக்கு வந்துள்ளது.
இது emergency stop signal, auto-cut turn indicator, distance to empty, voice commands, hazard lamps மற்றும் follow-me headlamps போன்ற அம்சங்களைப் பெறுகிறது.
இந்தியாவில், TVS Jupiter 110 ஸ்கூட்டர் Honda Activa-வுடன் போட்டியிடுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |