புதிய Volvo XC90 facelift கார் இந்தியாவில் அறிமுகம் - விலை என்ன தெரியுமா?
Volvo XC90 ஃபேஸ்லிஃப்ட் மார்ச் மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
ஸ்வீடன் நாட்டை சேர்ந்த வால்வோ கார்ஸ் இந்தியா நிறுவனம் தனது Volvo XC90 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை மார்ச் 4-ஆம் திகதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
வால்வோ எக்ஸ்சி90 ஃபேஸ்லிஃப்ட் மாடல் கடந்த ஆண்டு செப்டம்பரில் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த இரண்டாம் தலைமுறை மாடல் காஸ்மெட்டிக் மாற்றங்களுடன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
இந்த கார் உலகளவில் SUV 48V mild hybrid தொழில்நுட்பம் மற்றும் plug-in hybrid தொழில்நுட்ப விருப்பத்துடன் 2-லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது.
இந்தியாவில், இது முதல் mild hybrid எஞ்சினுடன் அறிமுகப்படுத்தப்படலாம். வால்வோ எக்ஸ்சி90 கார் கடந்த 2014-ஆம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
வால்வோ எக்ஸ்சி90 கார் தற்போது ரூ.1.01 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட வால்வோ எக்ஸ்சி90 ரூ.1.05 கோடி (எக்ஸ்-ஷோரூம்) விலையில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது Mercedes-Benz GLE, BMW X5, Audi Q7 மற்றும் Lexus RX போன்றவற்றுக்கு போட்டியாக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Volvo XC90 facelift, New 2025 Volvo XC90 facelift