790கிமீ பயணிக்கக்கூடிய புதிய Mercedes CLA எலக்ட்ரிக் அறிமுகம்!
மெர்சிடஸ்-பென்ஸ் நிறுவனம் தனது புதிய முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் CLA மாடலை அறிமுகம் செய்துள்ளது.
ஒருமுறை சார்ஜ் செய்தால் 792கிமீ வரை பயணிக்கக் கூடியதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் Tesla Model 3, Polestar 2, 2026 BMW i3 Neue Klasse போன்ற மொடல்களுக்கு போட்டியாக இருக்கும்.
புதிய CLA, 272hp பவரைக் கொண்ட பின்புறம் இயக்கும் மொடலாக வந்துள்ளது. மேலும், 353hp சக்தியுடன் 4Matic (நான்கு சக்கர இயக்க முறை) மொடலும் கிடைக்கும்.
இந்த மாடல் 93% ஆற்றலை செயல்படுதலுக்கு மாற்றும் திறனைக் கொண்டதாக மெர்சிடஸ் தெரிவித்துள்ளது.
இது இரண்டு பேட்டரி விருப்பங்களை வழங்குகிறது:
- 85kWh லித்தியம்-அயன் பேட்டரி – அதிகபட்சம் 792கிமீ பயணிக்கும் திறன்.
- 58kWh லித்தியம்-அயன்-பாஸ்பேட் பேட்டரி – சுமார் 500கிமீ வரை பயணிக்கலாம்.
800-வோல்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் மூலம் 10 நிமிடங்களில் 300கிமீ வரையிலான சார்ஜை எடுத்துக்கொள்ள முடியும்.
மேலும், Eco Assistant & AI Support போன்ற நவீன தொழில்நுட்பங்கள் உட்பொதிக்கப்பட்டுள்ளன.
Netflix, YouTube, ChatGPT போன்ற வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது.
இன்னும் முழுமையாக மின்சார வாகனத்திற்கு மாற தயாராகாதவர்களுக்காக, மெர்சிடஸ் ஹைபிரிட் (Hybrid) மொடலையும் வழங்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |